முழுவதுமாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த விஜய் குடும்பம் தற்பொழுது இந்து சமயத்தை நோக்கி திரும்பி உள்ளது. அதாவது சில குடும்பப் பிரச்சினையால் விஜய்யும் அவரது தந்தையும் பேசிக்கொள்ளாமல் இருக்கின்றனர் இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை மறந்து விட்டு கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று அக்னி தீர்த்தம் முதல் அனைத்து தீர்த்தங்களிலும் புனித நீராடி அவர் தனது குடும்ப நலன் மற்றும் மன அமைதிய வேண்டி ருத்ர பூஜை செய்து வழிபட்டதும் செய்திகளில் வெளியானது. இந்த கோவில் தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு நான் சென்றதில்லை! ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக புறப்பட்டு சென்று விடுவேன் அப்படித்தான் கடந்த ஆண்டு கேதநாத் கோவிலுக்கு சென்றிருந்தேன் தற்பொழுது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கும் வந்து உள்ளேன்.
இங்கு வந்து இங்குள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் புனித நீராடியது என் உடலுக்கு மனதிற்கும் பெரும் அமைதியை ஏற்படுத்தி உள்ளது உழைக்கும் அனைவராலும் உயர்ந்துவிட முடியாது யாரவது ஒருவரை தான் கடவுள் உயர்த்துகிறார், எங்கேயோ அடையாளம் தெரியாமல் பிளாட்பாரத்தில் இருந்த என்னை இவ்வளவு தூரத்திற்கு உயர்த்தியுள்ளார் என்றால் இவை அனைத்திற்கும் கடவுளின் ஆசிர்வாதம் தான் காரணம் சிவன் தான் எல்லாம் அவருக்கு தான் நான் மிகவும் கடன் பட்டு உள்ளேன் அந்த கடனை செலுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளேன் அது மட்டும் இன்றி நான் சிம்ம ராசி என்பதாலும் சிவனுக்கு உண்டான ராசி. ஒரு இடத்தில் சிவன் கோவில் இருக்கிறதோ இல்லையோ சிவனை நினைத்து ஒரு நிமிடம் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டாலே ஒரு புது எனர்ஜி கிடைக்கிறது என்று சிவபெருமான் மீது அவர் கொண்டுள்ள பற்றை தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பாகவும் கடந்த வருடம் அவர் தனது 80 வது வயதை பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து எஸ்.ஏ சந்திரசேகரும் அவரது மனைவியும் வழிபாடு நடத்தினர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவன் கோவிலுக்கு சென்று அன்னதானம் வழங்கி வருவார். இதனால் எஸ் ஏ சந்திரசேகர் தாய் மதத்திற்கு திரும்பி விட்டார் என்ற செய்திகள் உலா வந்தது. இந்த நிலையில், இவரைப்போல் தமிழ் திரையுலகில் நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன், தற்பொழுது கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு நான் மாறிவிட்டேன் என்று அவர் கூறிய பேட்டி சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அப்படி வைரலான பேட்டியில் லிவிங்ஸ்டன் கூறியதாவது, 'என் மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு போவதற்கு எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது, போர் அடிச்சிருச்சு கிறிஸ்தவத்தில் இருந்து.
இந்து மதத்திற்கு போலாம்னு இப்போ கிருஷ்ணர் பக்தர் ஆகிவிட்டேன் ஹரே ராம ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்ந்துட்டேன், என்னுடைய நெத்தி பொட்டு கிருஷ்ணருடைய நெத்தி போட்டு தான்! அதன் மேல் மிகவும் பிரியமாகிவிட்டேன் அங்கு சென்று பாடல்களை இசைத்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற பாடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாக தெரிவித்துள்ளார். இப்படி தமிழ் திரையுலகில் இருந்து பிரபலமான கிறிஸ்துவர்கள் தொடர்ச்சியாக பழையபடி இந்து மதத்திற்கு திரும்பும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.