24 special

கூட்டணிக்காக நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க..இந்த 10 தொகுதியில தட்றோம் தூக்குறோம்..! ஜெ பி நட்டா வியூகம் ..!

Annamalai,jpnadda
Annamalai,jpnadda

தமிழகத்திற்கு இரண்டி நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் நட்டா இன்று வருகை தர இருக்கிறார், பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் பொதுகூட்டம் ஆகியவற்றில் நட்டா பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார் நட்டா இன்றைய தமிழக வருகை ஓரளவு பாஜகவின் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எடுக்க இருக்க கூடிய வழியை உறுதி செய்ய பயன்படும் என்று கூறப்படுகிறது.


நட்டாவின் நிகழ்ச்சி நடைபெறும் மேட்டு பாளையம் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது நீலகிரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும், பாஜக போட்டியிட்ட தொகுதி.. 2019 எம்பி தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் நீலகிரியை பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற செய்திகளும் வந்தன..

இந்த முறை பாஜக நீலகிரியை குறி வைத்துவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.. தொகுதியில் ஓபனாகவே இறங்கி தேர்தல் வேலையையும் பார்க்க துவங்கிவிட்டதாக சொல்லும் நிலையில், நட்டாவின் வருகை மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது..

இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், நீலகிரி மற்றும் கோவை தொகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தவே முதலில் பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. கூட்டணி குறித்து நேரத்தை வீண் செய்யாமல் பாஜகவிற்கு அஸ்திவாரம் இருக்க கூடிய 10 தொகுதிகளை டார்கெட் செய்து இனி நேரடியாக களம் இறங்க போகிறதாம் பாஜக .

 அதுமட்டுமல்ல, பாஜக பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு, ஜேபி நட்டா நேரடியாகவே செல்ல திட்டமிட்டுள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் ஆகியோர் செல்வார்கள் என்று கூறப்படுகிறது...

நட்டாவிடம் தமிழக பாஜக சார்பில் கள நிலவரங்களை எடுத்து கூற இருக்கிறார்களாம், நட்டாவும் பல்வேறு தேர்தல் கணக்குகளுடன் தனது டீம் கொடுத்த அறிக்கை போன்றவற்றை தமிழக பாஜகவினருக்கு கூற இருப்பதாக கூறப்படுகிறது.

2024 நிச்சயம் தமிழகத்தில் குறைந்தது 2014-ல் பாஜக வாங்கிய வாக்குகளை காட்டிலும் 5 முதல் 8 % வாக்குகள் அதிகமாக வாங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்க பட இருப்பதாக கூறப்படுகிறது, கடந்து முறை நட்டா தமிழகம் வந்தபோது காரைக்குடியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார், அவரை அதிமுக முன்னாள் சுகாதார் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.

அதே போல் இந்த முறை நட்டாவை சந்திக்க அதிமுக இரண்டு அணிகளை சேர்ந்த தலைவர்கள், முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது, இவையெல்லாம் தாண்டி தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பாஜகவை விமர்சனம் செய்து வரும் நிலையில் அது குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெளிவான முடிவு இன்று எடுக்கப்படும் என கூறப்படுவதால்...!பா ஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.