Tamilnadu

தோடா .இப்ப அந்த சீனே இல்ல....2014 - ஓட கதை முடிஞ்சு போச்சு.. போட்டு தாக்கிய அண்ணாமலை!

Annamalai
Annamalai

பஞ்சாப் சென்ற பிரதமர் பாதுகாப்பு குறை காரணமாக நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாமல் மீண்டும் திருப்பிய நிகழ்வு பெரும் பதற்றமாக இந்தியா முழுவதும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது .இந்த நிலையில் தமிழகம்  முழுவதும் பாஜக சார்பில் அறப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் மதுரையில் நடந்த  போராட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை பல்வேறு அதிரடி  கருத்துக்களை முன் வைத்தார். அப்போது, பாரத பிரதமர் பஞ்சாப் மாநிலத்திற்கு நேற்று எதற்காக சென்றார்? பிரதமர் அவர்கள் நம் ஆன்மாவில் கலந்து ரத்தத்தில் கலந்து இந்திய மக்களுக்காக போராடி வருகிறார். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் பஞ்சாப் மாநிலத்திற்கு எதற்காகச் சென்றார்?  ராகுல் காந்தி அவர்களை போல இத்தாலிக்கு சென்றாரா? 15 நாட்கள் விடுமுறையில் நாடு தாண்டி நாடு சென்றாரா ?

சோனியா காந்தி அவர்களை போல எங்கே சென்றோம் என யாருக்கும் தெரியாமல் சென்றாரா? பிரதமர் அவர்கள் பாஞ்சாபிற்கு சென்றது இரண்டு காரணங்களுக்காக மட்டும் தான்.பகத் சிங் அவர்களுடைய நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்காகவும், 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே நலத்திட்டங்களை பஞ்சாப் மாநில மக்களுக்கு அளிப்பதற்காக சென்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை அரசியல் கட்சிக்காக பழிவாங்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு 20 நிமிடம் ஒரு இடத்தில் காக்க வைத்து அந்நிய நாட்டு கைக்கூலிகளை விவசாயிகள் என்ற போர்வையில் கொண்டுவந்து, ஒரு 500 -க்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு, பாரதப் பிரதமர் அவர்களை முழுவதும் சுற்றி வளைத்து கோஷம் போட வைத்து அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளனர்.

நமக்கு தெரியும் நண்பர்களே....  காங்கிரஸ் கட்சி என்பது எப்போதுமே பாரதிய ஜனதா கட்சிக்கு போட்டி கிடையாது. அது 2014- லேயே அந்த பந்தயத்தை நாம முடிச்சிட்டோம். காங்கிரஸ் கட்சி எந்தவொரு மாவட்டத்திலும் எந்த ஒரு பூத்திலும், எந்த மாநிலத்திலும் கூட பாரதிய ஜனதா கட்சிக்கு போட்டி கிடையாது. அது தெரிந்தது தான். இருந்தாலும் எதற்காக காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், பஞ்சாபில் ஆள்கின்ற காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அறப்போர் நடத்துகிறோம்? இந்தியாவில் இருக்கின்ற அனைத்து பிரிவினைவாத சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுவிப்பதற்காக.

காங்கிரஸ் எந்த நேரத்திலும் நமக்கு சமமில்லாத கட்சி இந்தியாவில் பிரிவினைவாதிகள் ஆங்காங்கு இருக்கின்றனர். தமிழகத்திலும் இருக்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த போராட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே நாம்  அனைவரும் இதே போன்று அறப்போராட்டம் நடத்தி பாரத பிரதமருக்கு நேர்ந்த  இந்த வரலாற்று பிழைக்கு தீர்வு காணும் வரை ஒன்றாக நின்று போராடுவோம்.இவ்வாறு அக் கூட்டத்தில் பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.