Tamilnadu

"தள்ளுபடி மறுப்பு" அடுத்த முறை ஓட்டு பாஜக-வுக்கு தான்  கிராமத்தில் மனமாறும் மக்கள் நடப்பது என்ன ?

Tamil news
Tamil news

திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியும் நகை கடன் தள்ளுபடி செய்வது உறுதி என்ற நம்பிக்கையில் இருந்த ஏராளமான மக்களுக்கு பேரதிர்ச்சியாக குறிப்பிட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் பலருக்கும் நகை கடன் தள்ளுபடி ஆகாததால் பொதுமக்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர்.


நகைக்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டமன்றத்தில் தெரிவிக்கும்போது, ஒரே ஒரு நபர் 672 கணக்கில் நகை கடன்களை பெற்று இருக்கின்றார். இதுமட்டுமல்லாது கீரனூர் பகுதியில் நகை பைகளே இல்லை. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் என்ற பகுதியிலும் இதே போன்று நடந்து இருக்கின்றது. எனவே முறையான ஆவணம் தாக்கல் செய்யாமலும் விதிகளின் கீழ் வராதவர்களும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

ஆனால் தேர்தல் அறிக்கையில் 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கியில் நகை வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தெரிவித்து இருந்ததை சுட்டிக்காட்டியும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி பேசியதை மேற்கோளாகக் காட்டி பல இடங்களில் கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கின்றனர் மக்கள்.

இருந்தபோதிலும் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என அமைச்சர் விளக்கம் அளித்து இருப்பதால் இனியும் நமக்கு நகை கடன் தள்ளுபடி கிடைக்காது என்ற விஷயத்தை தெரிந்து கொண்ட மக்கள் கொந்தளிக்க தொடங்கி, அடுத்த முறை தேர்தல் வரும்போது இவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது. சொன்ன வாக்கை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு அப்படி பார்க்கும் போது பேசாமல் பாஜகவுக்கு ஓட்டு போடலாம் என்றெல்லாம் கிராமத்தில் பேசுவதை கேட்க முடிவதாக பலரும் கருத்து சொல்ல தொடங்கியிருக்கின்றனர். விவாதங்களிலும் பேசுகின்றனர். 

அந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் நகை கடன் தள்ளுபடிக்காக எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சென்ற அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை ஏன் கருத்தில் கொண்டு இப்போது விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் நகை கடன் தள்ளுபடி பெற முடியாது என தெரிவிக்க முடியும் என கேள்வி கேட்கின்றனர்.

அதாவது கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்தார்கள், இந்த ஆட்சியில் சொன்ன மாதிரி நகை கடன் தள்ளுபடி செய்யவேண்டும் அல்லவா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது என்பது கூடுதல் தகவல்.