Tamilnadu

ஒரே நாளில் பாஜகவிற்கு கிடைத்த இரட்டிப்பு சந்தோசம்,சபதம் எடுத்து நிறைவேறிய அதிரடி திருப்பம்!

maridhas annamalai and vanathi
maridhas annamalai and vanathi

தமிழக காவல்துறை மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை )உத்தரவிட்டு இருக்கிறது, மேலும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டது செல்லும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.


இது தமிழக பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது, குறிப்பாக தேசிய ஆதரவாளரான மாரிதாஸ் மீது குண்டாஸ் சட்டத்தை உபயோகம் செய்ய தமிழக அரசு மிக பெரும் முயற்சியை தொடங்கிய நிலையில் அதற்கு இணையாக சட்ட போராட்டம் நடத்தி மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வெற்றியை பெற்று திரும்பி இருக்கிறது மாரிதாசிற்கு ஆதரவாக வாதடிய வழக்கறிஞர் தரப்பு.

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் திமுகவினருக்கும் மாரிதாஸ் கைதை கொண்டாட்டியவர்களுக்கும் மிக பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, அவசர கோலத்தில் ஒருவரை கைது செய்யவேண்டும் என திட்டமிட்டு பழியை சுமத்திய பலருக்கு நீதிமன்றம் கொடுத்த  தீர்ப்பு பாசிசத்திற்கு கொடுக்கப்பட்ட அடியாக பார்க்க படுகிறது. பிணையில் வெளிவராத வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் விரைவில் மாரிதாஸ் விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படுவதால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர், மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என நிரூபணம் ஆனநிலையில் தமிழக அரசிற்கு கிடைத்த மிக பெரும் அடியாக பார்க்க படுகிறது.

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயலில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் இனி ஈடுபடாது என்று நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக உணர்ந்து கொள்ளலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள் மாரிதாஸ் தவிர்த்து கைது செய்யப்பட்ட பிற பாஜகவினரை விடுதலை செய்யும் முயற்சியில் பாஜக தலைமை இறங்கியுள்ளது அதே நேரத்தில் முப்படை தளபதி மரணத்தை கிண்டல் செய்த திமுகவினரை திமுக ஆட்சியிலேயே உள்ளே தள்ளுவோம் என அண்ணாமலை சபதம் ஏற்று செயல்பட்டு வருவதால் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.