பிரபல எழுத்தாளர் சுந்தரராஜ சோழன் பிரதமர் மோடி நேற்று விரிவுப்படுத்தப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தை திறந்து வைத்ததையும், அதேநேரத்தில் ரயில் நிலையம் அமைவது குறித்து பார்வையிட்ட இரண்டு தகவலையும் ஒப்பிட்டு கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் அவரது கருத்து பின்வருமாறு :- இதுதான் மோடியின் பலமே,ஏன் மோடியை வீழ்த்த முடியாது என்பதற்கு இந்த இரு நிகழ்வே சாட்சி.2014 தேர்தலுக்கு முன் பீட்டர் அல்போன்ஸ் ஒன்று சொன்னார்,மோடியை இரு முகங்களாக காட்டுகிறார்கள் ஒன்று இந்துத்துவ முகம் இன்னொன்று வளர்ச்சியின் முகம்..இது அவர்களுடைய வெற்றி என்றார்.
அது பொய்யோ,மாயமோ அல்ல எதார்த்தம்.ராமஜென்ம பூமியும்,விஸ்வநாதர் ஆலயமும் நம்பிக்கை மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பொலிவுறும் அதே நேரத்தில்தான், பல கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு,ஜல்ஜீவனில் குடிநீர்,ஜன் ஔஷதி மூலம் மலிவு விலை மருந்து,இலவச கேஸ் அடுப்பு,எத்தனையோ குக்கிராமங்களுக்கு மின்சாரம்,சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக போடப்படும் சாலைகள்,மத்திய அரசு வீடுகட்டும் திட்டம்,ஸ்வச் பாரத் கழிப்பறை என மக்கள் நலத்திட்டங்களும் அரங்கேறுகிறது..
உலகம் சந்திக்கும் இந்த இக்கட்டான நிலைமையில் நாமே சுயாதீனத்தால் 100 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறோம்..எல்லா துறையிலும் ஊழலற்ற நிர்வாகம் தன் பணிகளை வேகமாக செய்து வருகிறது,நவீனமயமாகிறது.ஒரு பக்கம் கலாச்சார எழுச்சி இன்னொரு பக்கம் வளர்ச்சி.இந்த இரட்டை குதிரை அதிவேக சவாரிதான் மோடியின் பிம்பத்தை தாங்கிப் பிடிக்கிறது.யார் எதிர்த்தாலும்,எத்தனை பேர் எதிர்த்தாலும் அவரை வீழ்த்த முடியாமல் இருக்கும் காரணங்கள் இவைதான்.
இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒருவன் அவரிடம் தோற்றுக் கொண்டேதான் இருப்பான் இதனை 2019 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு சேகர்குப்தா விரிவாக பேசினார்.மோடியை தனி மனித தாக்குதல் செய்தால் அவர் பிம்பம் இருப்பதை விட மூன்று மடங்காகும் என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.