Tamilnadu

ஏன்டா திமுகவிற்கு ஓட்டு போட்டோம் கதறும் மக்கள்... சொன்னது ஒன்று செய்வது ஒன்று!!

Udayanidhi - stalin
Udayanidhi - stalin

எந்த ஒரு ஆட்சியும் புதிதாக அமைந்தால் குறைந்தது 100 நாட்கள் புதிதாக பொறுப்பேற்ற அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும், அதன் பிறகே அந்த ஆட்சியாளர்கள் மீது விமர்சனத்தை வைக்கவேண்டும் என்பது பல பொருளாதார நிபுணர்கள் கடைபிடிக்கும் மரபு ஆனால் தமிழகத்தில் அப்படியே தலை கீழாக மாறியுள்ளது.


முதல் 100 நாட்களை மக்கள் கடந்தாலே ஆச்சர்யம் என்ற சூழல் உண்டாகியுள்ளது, காரணம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னது ஒன்று தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு செய்வது ஒன்று அதில் சிறு உதாரணம்.. திமுக தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கு போன்றவை இருக்காது எனவும், ஊரடங்கு காலத்தில் ஓவ்வொரு குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும்.

ஊரடங்கு காலத்தில் மின்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் போராடியது ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு முதல் வாரமே ஊரடங்கை அறிவித்தது, மின் கட்டணம் கணக்கிடுவதிலும் கடும் குளறுபடி, 2019 மே மாதம் உள்ள மின் கட்டணத்தை வசூலிக்க தொடங்கியது, இதில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நிலைமை படு மோசம்.

அடுத்தது ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்தாக இருக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது, நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பே இல்லை மக்களை திசை திருப்ப வேண்டாம் என பாஜக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்த போதும் பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்தது திமுக, ஆனால் இன்று நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என தெரிவித்து அதிலும் பல்டி அடித்துள்ளது.

மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகவும் அறிவுறுத்தியுள்ளது தற்போதைய திமுக அரசு, இதிலும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது அடுத்தது ஆட்சிக்கு வந்த பின்பு பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவித்தது திமுக இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தியாகராஜன் பெட்ரோல் விலையை குறைக்க வாய்ப்பில்லை என தெரிவித்து விட்டார்.

இதன்மூலம் திமுக போலி வாக்குறுதியை அளித்து தமிழக மக்களுக்கு குல்லா போட்டுள்ளது உறுதியாகி உள்ளது, இது மட்டுமல்லாமல் கட்டுமான பொருட்கள் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது, புதிதாக வீடு கட்டவேண்டும் என யாராவது எண்ணினால் அவர்களுக்கு கனவாக முடியும் அளவிற்கு விலைவாசி திமுக ஆட்சி அமைந்த மறுநாளே அதிகரித்துள்ளது.

மளிகை பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது, பாமாயில் அரிசி, முட்டை, மட்டன் சிக்கன் என அனைத்து பொருள்களும் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது, இதன்மூலம் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர், குறிப்பாக லாக் டவுன் நேரத்தில் கையில் பணமில்லாமல் ஏன்டா திமுகவிற்கு வாக்களித்தோம் என பொதுமக்கள் வெளிப்படையாக புலம்பும் நிலைக்கு தமிழக மக்களின் நிலை சென்றுள்ளது.

மாதம் இல்லதரசிகளுக்கு 1000 ரூபாய் எப்போது கொடுப்பார்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர் ஆனால் நிதி நிலைமையோ டாஸ்மாக்கை நம்பி இருப்பதால் இப்போது ஆட்சி நடத்துவதே கேள்வி குறியாக இருக்கும் நிலையில் அதையும் வழக்கம் போல் திமுக அரசாங்கம் புறம் தள்ளி வாக்களித்த மக்களுக்கு மேலும் ஒரு ஆப்பை அடிக்கும் என்றே கூறப்படுகிறது.

சொன்னது எதையும் செய்யாமல் போலி வாக்குறுதி மூலம் ஆட்சிக்கு வந்த திமுக உடனே பதவி விலக வேண்டும் என வாக்களித்த மக்கள் வீதியில் இறங்கி போராடும் நாட்கள் விரைவில் அரங்கேறலாம் என்பதே தற்போதைய சூழலாக உள்ளது.