24 special

அதிரடி திருப்பம் ரஷ்யா செல்கிறார்... சீனா அதிபர்...!

Xi jinping , Vladimir Putin
Xi jinping , Vladimir Putin

சீனா அதிபர் ஷி ஜின்பிங்  ரஷ்யா பயணம்...சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினை இன்று மாஸ்கோவில் சந்திக்கிறார்.


உக்ரைனில் போர்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாதிமிர் புதினுக்கு எதிராக, கைது ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் விதாமாக சீனா அதிபர் ஷி ஜின்பிங், விளாதிமிர் புதினை இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்திக்கிறார்.

சீன அதிபராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு ஷி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.மேலும் உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக விளாதிமிர் புதினுக்கு, சர்வதேச நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்த நிலையில், அவரை சந்திக்கும் முதல் உலக தலைவராக ஷி ஜின்பிங் உள்ளார்.

மேற்கத்தியா நாடுகள் அனைத்தும் ரஷ்யாவை மறைமுகமாக தாக்கிவரும் நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில், இவர்களுடைய சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் உக்ரைன் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுடன், ரஷ்யா ராணுவம் போராடி வருகின்றன.  “ரஷ்யாவிற்கு ஆதரவாக மாஸ்கோவில் சீனா ஆயுதங்களை வழங்கிவதற்கு, மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தற்கு மத்தியில், இந்த சந்திப்பை சீனா மேற்கொண்டுள்ளதாக பிரிட்டன் சிந்தனையாளரும், ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜொனாதன் இயல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்”.   

அதேபோல  “சீனாவின் கிரெம்ளின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட செய்திதாள் கட்டுரையில், விளாதிமிர் புதினின்  பழைய நண்பரான ஷி ஜின்பிங் வருகைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும், விளாதிமிர் புதின் என்னுடைய சிறந்த நண்பர் என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தது”.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரு நாட்டு தலைவர்களுடைய சந்திப்பில், சீனா மற்றும் ரஷ்யா நாட்டுக்கிடையே விரிவான கூட்டாண்மையை அதிகமாக்குவது. அமெரிக்கா ஆதரவு அளிக்காத பல நாடுகளை ஒன்றினைப்பது, சர்வதேச நாடுகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது போன்ற பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இருபெரும் சக்தி வாய்ந்த தலைவர்கள் மேற்கொள்ளும் சந்திப்பு, உக்ரைன் நாடுகளுக்கு பெரும் நெருக்கடையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.  

இருபெரும் சக்திவாந்த தலைவர்கள் சந்திப்பதால், ‘உலக நாடுகள் முக்கியமாக மேற்கத்திய நாடுகளின் பார்வை தற்போது சீனாவின் பக்கம் திரும்பி உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’.