தமிழகத்தில் திராவிட கூட்டணி கட்சி வேண்டாம் என்ற அண்ணாமலையின் நிலைபாட்டிற்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள், பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த கங்காதேவியின் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் பதவியிலிருந்த ஜெயலட்சுமி, மதுபாலான், செங்கல்பட்டு மாவட்ட இளைஞரனி செயலாளரான மணிகண்டன், சிறுபான்மை பிரிவு செயலாளரான பிரான்சிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராணி நாச்சியப்பன் போன்ற 100 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் சிட்லபாக்க ராஜேந்திரன் மின்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி குறிவைத்து தூக்கும் காரணம் என்ன??? சமிபத்தில் சென்னை அரும்பாக்கம் பாஜக கமலாளயத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டதில் பேசிய அண்ணாமலை, வரும் காலங்களில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் சேராமல் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். மேலும் திராவிட கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை என்றும் அப்படி போட்டியிட நேர்ந்தால் நான் தலைவர் பதிவியிலிருந்து விலகப் போவதாக தெரிவித்து, அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருந்தார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து, அக்கட்சிக்கும் அண்ணாமலைக்கும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஜக கட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் பரவ தொடங்கியதாகவும், இதனால் ஏராளமான பொதுமக்கள் பாஜகவில் இணைய விரும்புவதாகவும் அண்ணாமலை அவ்வப்போது தெரிவித்துவந்தார்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். மேலும் தமிழகத்தில் அண்ணாமலை ஒரு நல்ல தலைவனாக இருக்கிறார் என்ற பேச்சும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதையேல்லாம் உற்று கவனித்த வந்த எடப்பாடி பழனிச்சாமி “எங்கு பாரதிய ஜனாதா கட்சி தமிழகத்தில் எதிர்கட்சியாக வந்துவிடுமோ என்ற அச்சத்திலும், தமிழகத்தில் அண்ணாமலை முதல்வராக வந்திடுவாறோ என்ற பயத்திலும் பாஜக நிர்வாகிகளை வலைவீசி தூக்கிறார்” என்ற பேச்சும் மக்கள் மத்தியில் காணப்படுகிறதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திராவிட கூட்டணி கட்சிகளுடன் பாஜக இணைய வேண்டாம் என்ற அண்ணாமலையின் கருத்துக்கு எதிராகவே, பாஜக கட்சியின் நிர்வாகிகளை அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி இணைத்துக்கொள்கிறார் என்று அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.