எது நடக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி இத்தனை நாள் அமைதியாக காய் நகர்த்தி வந்தாரோ அது அனைத்தையும் மொத்தமாக காலி செய்து இருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல்.
கொங்கு பகுதியில் நடக்கும் இடை தேர்தல் என்பதால் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்து இருக்கிறார், இதனால் எப்படியாவது 20% வாக்குகளை வாங்கி இரட்டை இலை இல்லை என்றாலும் இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என பல்வேறு யுத்திகளை வகுத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி அதுவரை எந்த பிரச்னையும் யில்லை ஆனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பின் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் யாருடைய புகைப்படமும் இடம்பெறவில்லை GK வாசன், கிருஷ்ணசாமி புகைப்படங்கள் இருந்தன ஏன் பூவை ஜெகன் மூர்த்தி புகைப்படங்கள் கூட இடம்பெற்று இருந்தது.
அதைவிட கொடுமை என்னவென்றால் பாஜக தலைமையிலனா தேசிய ஜனநாயக கூட்டணி போன்று தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டணி ஒன்றை பாஜகவிற்கு போட்டியாக உருவாக்கி இருந்தனர் எடப்பாடி பழனிசாமி தரப்பு.
இது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்க உடனடியாக தகவல் டெல்லி பாஜகவிற்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது இனியும் தாமதிக்க வேண்டாம் உடனடியாக 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கூட்டணியை வகுக்க வேண்டும் மேலும் இடை தேர்தலில் குறைந்த பட்ச வாக்குகளை வாங்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முழுமையாக ஆலோசனை நடத்த அண்ணாமலையை டெல்லி வர சொல்லி உத்தரவு பறந்து இருக்கிறது.
இந்த சூழலில் தான் எது நடக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தினாரோ அது நடந்து விட்டது, இதுநாள் வரை ஓபிஎஸ் ஈபிஎஸ் பிரச்சனையில் சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பாஜக தலையிடவில்லை ஆனால் வரும் நாட்களில் பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செல்லும் சூழலை ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமியே உண்டாக்கி இருக்கிறார்.
எப்படி சரியான நேரத்தில் சசிகலா தவறான முடிவை எடுத்தாரோ அதே போன்று ஒன்றுக்கும் உதவாத இடை தேர்தல் மூலம் வீண் வம்பை விலைக்கு வாங்கி அதிர்ச்சியில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.
இனி எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக அணி மாறலாம் என்றும் அதில் முக்கியமானவராக மணியான ஒருவர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகின்றனர் கொங்கு பகுதியை சேர்ந்த மக்கள்.