24 special

கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றி கொடுத்ததற்கு... எடப்பாடி காட்டும் நன்றி விசுவாசம் இதுதானா? பாரத பிரதமரே அப்செட்டாம்..!

Modi,  edappadip
Modi, edappadip

அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று நினைத்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. எப்படியாவது ஒற்றை தலைமையாக வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு இன்று அவருக்கே எதிராக திரும்பி இருக்கிறது.


இரட்டை இலை சின்னம் கோரியும், இடைக்கால பொதுச் செயலாளராகத் தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது பெரும் பின்னடைவை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில்  தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடையிட்டு மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தேர்தல் ஆணையமும் பன்னீர் செல்வமும் இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு நாளைக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்.

அதிமுக பிரதிநிதி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய எந்த உரிமையும் இல்லை. பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. 

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விட்ட நிலையில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க படுகிறது.

பன்னீர் செல்வம் போன்று தேர்தல் ஆணையமும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் எடப்பாடி பாடு திண்டாட்டம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். ஏற்கனவே பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டணி ஒன்றை எடப்பாடி பழனிசாமி உருவாக்க பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.

கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றி கொடுத்ததற்கு எடப்பாடி காட்டும் நன்றி விசுவாசம் இதுதானா என பிரதமர் மோடி வரை அதிருப்தி அடைந்து இருக்கிறார்களாம், நிலைமை சிக்கலானதை உணர்ந்த எடப்பாடி தம்பிதுரை மூலமாக டெல்லியை சமாதானம் செய்ய தூது அனுப்பியும் டெல்லி கண்டு கொள்ளவில்லையாம்.

இதனால் கடைசி நேரத்தில் இடை தேர்தல் என்ற ஒன்றின் மூலம் வச்சாங்க பாரு ஆப்பு என புலம்ப தொடங்கி இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.