
தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் முடிந்தாலும் அதனுடைய பரபரப்பு இன்னும் குறையவில்லை, குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் இந்த தேர்தல் குறித்து மிக பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை பாஜக கணிசமான தொகுதியில் வெற்றி பெற்று, அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றால் தமிழகத்தில் எதிர்க்கட்ச்சிகளாக நாங்கள் தான் என்று சூடிக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலை கைப்பற்றிவிடுவார்கள் என்று இப்போதே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களை அழைத்து சரியாக வேலை செய்யவில்லை என கூறியது, ஊடகத்தில் தலைப்பு செய்திகளாக வந்தது இதனால் மற்ற மாவட்ட செயலாளர்களை சந்திப்பை தவிர்த்தார். இந்த நிலையில், தனக்கு நெருக்கமான உளவுத்துறை மூலமா வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என கேட்டாராம். முக்கியமாக அதிமுக வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை பாஜகவின் வெற்றி என்பது எப்படி உள்ளது என்று முக்கியமாக கவனம் செலுத்தி வந்துள்ளாராம்.
ஆனால், பலரும் கூறியது அதிமுகவை விட கூடுதலாக பாஜக வாக்குகள் வாங்கும் என கூறியது எடப்பாடி பழனிசாமிக்கு மிக பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து தொகுதிகளில் அதிமுக வெற்றி பெரும் என எடப்பாடி பழனிச்சாமி நினைத்த நிலையில், கடைசி நேரத்தில் அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றுள்ளதாம். குறிப்பாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது கொங்கு மண்டலத்தில் உள்ள எம்எல்ஏவால் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் தான் ஓபிஸுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு ஆதரவாகவும் நின்றதால் தான் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் இருக்கையை கைப்பற்றியதோடு அதிமுகவையும் கைப்பற்றினார்.
அப்படி இருக்கையில், கொங்கு மண்டலத்தில் இந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை என்பது இந்த தேர்தலில் நிரூபணமாகும் என உளவு துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளார்களாம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி யாரிடம் பேசுவது என்பது தெரியாமல் இருந்து வருகிறாராம். குறிப்பாக தனது நெருக்கமான ஜோசியரை நேரடியாக தொடர்பு கொண்டு அவரிடம் இது குறித்து கேட்கையில், அவர் கூறிய தகவல் தான் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம் எடப்பாடி பழனிசாமிக்கு. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்பதை அதிமுக இழக்கும் எனவும் இதனால் அதிமுகவின் தூண்களாக இருக்கும் தலைவர்கள் முக்கியமாக தென் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களும், கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களும் பாஜக பக்கம் நேரடியாக செல்வார்கள் அல்லது அதிமுகவில் இருந்தே எதிராக குரல் கொடுப்பார்கள் போன்ற பிரச்சனைகள் நிலவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவர் கூறியதாக ஒரு தகவல் 'அரசல் புரசலா' போயிட்டுயிருக்கு.
இந்த சூழ்நிலையில் தான் ஜூன் நான்காம் தேதி என்ன முடிவுகள் கிடைக்கும் என்பது குறித்து அனைத்து கட்சிகளை காட்டிலும், எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த கவலையுடன் இருந்து வருகிறாராம். ஒரு வேலை அதிமுக அனைத்து தொகுதிகளிலும் இழக்கும் பட்சத்திலும், பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் நிலைமை ஏற்படும் என்பதால் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கையில் இருக்குமா..? இருக்காதா..? என்ற பெரிய கேள்வியை உண்டாகும் என்பதால் முன்கூட்டிய என்ன செய்வது என்று மிக மிக நெருக்கமான ரத்த வழி சொந்தங்கள் உடைய மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதாவது கட்சி சாராத முன்னாள் நம்பர்களுடனும் ஆலோசித்து வருகிறாராம்.
இதில், பிரதாமர் மோடிக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசியதும் மோடிக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தது போன்ற காரணங்களால் டெல்லி வட்டாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி யாரை தொடர்பு கொண்டாலும் அவர்களால் எந்த காரியமும் நடக்க போவதில்லை என அறிந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் என்ன செய்ய முடியும் என யோசனையில் இருந்து வருகிறாராம்.