
எந்த ஒரு துறையிலும் போட்டி என்பது இல்லாமல் இருக்காது அதன்படி சினிமா துறையை எடுத்துக் கொண்டால் இரண்டு தரப்பினர் கிடையே போட்டி என்பது எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்கள் இருவரும் போட்டி போட்டு கொள்கிறார்களோ இல்லையோ அவர்களது ரசிகர்களிடையே போட்டியானது முற்றி இருக்கும்! அதன்படி ரஜினி - கமலுக்கு பிறகு விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயான போட்டி என்பது எப்பொழுதுமே அதிரடியாகவும் சமூக வலைதளத்தையே அதிர வைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரங்களில் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியிடப்படாமல் இருக்கும் இருப்பினும் விஜய் படம் ஒன்று வெளியாகிறது என்றால் அதற்கு எவ்வளவு வசூல் ஆகிறது விஜய் படத்தின் பாடல் வெளியிடப்படும் பொழுது எவ்வளவு பேர் அதனை பகிர்கிறார்கள் எவ்வளவு பேர் அதற்கு லைக் கொடுக்கிறார்கள் என்பதை கவனித்து வைத்து அடுத்து அஜித் திரைப்படத்தின் பாடல் அல்லது டீசர் ட்ரைலர் வெளியாகும் பொழுது ஒப்பிட்டு பார்க்கும் இருவருக்கிடையான சண்டை என்பது எப்பொழுதுமே நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒன்று!
அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லாவும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் உங்களுக்கு ரிலீசானது, இந்த இரண்டு படங்களில் வீரம் திரைப்படம் ஜில்லாவை விட நன்கு வசூல் சாதனை படைத்த காரணத்தினால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே வாக்குவாதமும் சில இடங்களில் கைகலப்பு சண்டைகளும் நடந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருந்து வந்தது ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு அதே உங்களுக்கு அன்று மீண்டும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மூலம் விஜய் மற்றும் அஜித் இருவரது திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று மோதியது. இந்த இரண்டு திரைப்படங்களின் வெளியாகும் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மேலோங்கி இருந்தது.அதில், வாரிசு படத்தில் விஜயின் ரஞ்சிதமே பாடலை விட துணிவு படத்தில் அஜித்தின் சில்லா சில்லா பாடல் சில மணி நேரங்களிலேயே அதிக லைக்களை பெற்று விட்டது. இதனால் துணிவில்லா - வாரிசு மற்றும் வாரிசிடம் குனிவு என்ற ஹாஷ்டாக்குகள் ட்விட்டரில் டிரண்டாகியதோடு இரண்டு ரசிகர்களும் மாறி மாறி ட்ரோல் செய்து கொண்டிருந்தனர்.
மேலும் இதனை இயக்குனர் மணிரத்தினம் ஒரு சீறற்ற சாலையோர தெரு சண்டை என்று விமர்சனம் செய்திருந்தார். இதனை அடுத்து விஜய் தற்போது சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகி அரசியலில் இறங்க உள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சிகர மகிழ்ச்சியை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது அதனால் விஜய் ரசிகர்கள் கில்லி திரைப்படத்தை தற்போது மீண்டும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி வருகின்ற மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரீ ரிலீசுக்கு மீண்டும் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் வந்துள்ளது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மீண்டும் போட்டியை கிளப்பி உள்ளது! அதனால் விஜய் ரசிகர்கள் அஜித் திரைப்படத்தின் ரீமைக்கை விட அதிக வசூலை கில்லி படத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில் உள்ளதாகவும் அஜித் ரசிகர்கள் மங்காத்தா ரீ ரிலீஸ் காக மரண வெய்ட்டிங்கில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் முன்வைக்கப்படுகிறது.