24 special

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்... ரகசியம் வெளியானது...

MANSOOR ALIKHAN, SELVAPERUNTHAGAI
MANSOOR ALIKHAN, SELVAPERUNTHAGAI

தமிழ் சினிமாவில் முரண்பாடான மற்றும் துணை வேடங்களில் பெரும்பாலாக நடித்து மக்களிடம் ஒரு முக்கிய வில்லனாக இடம் பெற்றிருந்த ஒரு நடிகர் மன்சூர் அலிகான்!  முதல் முதலாக இவர் ஆர்கே செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் என்னும் திரைப்படத்தில் எதிரியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதற்கு அடுத்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தமிழ் திரைப்படத்தில் இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இசையமைப்பாளராகவும் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மன்சூர் அலிகான் ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்து 1999 ஆம் ஆண்டு இந்திய பொது தேர்தலில் தமிழ்நாட்டின் பெரிய குளத்தில் புதிய தமிழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டார். அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டிலும் தமிழகத்தில் நடைபெற்ற இந்திய பொது தேர்தலில் சுயேட்சையாக நின்றார். 


பிறகு 2019 இந்திய பொது தேர்தலில் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்ற தனது சொந்த கட்சியை உருவாக்கினார். கிட்டத்தட்ட மூன்று இந்திய பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே தழுவி கட்சி தாவலையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இதனை அடுத்து தமிழ் தேசிய புலிகள் என்ற சொந்த கட்சியின் நிறுவி 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் இந்த தேர்தல் காலத்திலேயே அவரது கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருந்தவர் மீது மன்சூர் அலிகான் திருட்டு பட்டம் கட்டியதை அடித்து அவர் தனியார் பத்திரிகை தொலைக்காட்சி ஒன்றிற்கு அழைத்த பேட்டியில் மன்சூர் அலிகான் உடன் அரை மணி நேரம் பேசி விட்டாலே நமக்கு பைத்தியம் பிடித்து விடும் அவருக்கு கட்சி தொடங்குதல் மற்றும் தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை தகவல்களும் தெரியவில்லை!  மேலும் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் அவராக ஏதேனும் ஒரு கருத்தை பொதுவெளியில் கூறிவிட்டு வருகிறார் அதனால் கட்சிக்குதான் பெரிய அவப்பெயர் ஏற்படுகிறது என்று மன்சூர் அலிகான் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். 

அதுமட்டுமின்றி அவ்வப்போது பல சர்ச்சை குறிய கருத்துக்களையும் பேசி வழக்கு வரைக்கும் சென்று வருவது மன்சூர் அலி கானுக்கு புதிதல்ல! அதன்படி லியோ திரைப்படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கடந்த காலங்களைப் போன்று இந்த முறையும் ஹீரோயின் திரிஷாவை தூக்கி வந்து கற்பழிப்பு காட்சியை எடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் எடுக்கவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது! இதற்காக த்ரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ததும் பெருமளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி நடிகர் மன்சூர் அலிகான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான செல்வப் பெருந்துகைக்கு நேரடியாக சென்று கடிதம் ஒன்றை வழங்கி வந்துள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் தனது தாய் கட்சிக்கு திரும்பியதாக கூறியுள்ளார் மேலும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் தரக்குறைவாக மன்சூர் அலிகான் பேசி இருப்பது சமூக வலைதளம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது இதனால் மீண்டும் மன்சூர் அலிகான் பெருமளவினால் சர்ச்சையில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இத்தனை நாள் மோடி எதிர்ப்பு கூட்டத்தில் இருந்து இப்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என நிரூபணமாகியுளளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது