24 special

துவண்டு கிடக்கும் கட்சியை தூக்கி நிறுத்த சீமானிடம் சென்ற எடப்பாடி!! கட்டன் ரைட்டாக சொன்ன சீமான்!!

seeman ,edapadi
seeman ,edapadi


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவு அதிமுகவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி அதிமுகவை நிர்மூலமாக மாற்றியது. ஏனென்றால் அதிமுக ஜெயலலிதா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டுள்ளது மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு அவரது மறைவிற்குப் பிறகு   அதிமுக மூன்றாக பிரிந்து பெரும் அவதிகளை கண்டது. இதில் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் சீனியர் தொண்டர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தமிழக அரசியலில் நிலையை சரியாக கணக்கிட்டு தற்போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளனர்.


ஆனால் இதற்கு முன்பாக பாஜகவின் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஏதேதோ காரணங்களை முன்வைத்து கூட்டணியில் இருந்து விலகி தேசிய அளவில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமலே லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. அதுமட்டுமின்றி லோக்சபா தேர்தலில் முடிவுகள் அதிமுகவிற்கு பெருமளவிலான பின்னடைவுகள் இருப்பதை எடுத்துக்காட்டியது. ஏனென்றால் பிரச்சாரத்தின் பொழுதே இந்த தேர்தல் திமுக மற்றும் பாஜகவிற்கு இடையிலான தேர்தல் ஆக மாறிவிட்டது அதிமுக என்றோ மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர் அதற்கு ஏற்ற வகையில் லோக்சபா தேர்தலில் முடிவுகள் அமைந்தது. 

அதாவது பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவிற்கு அடுத்த கட்டத்தை பாஜக தான் பெற்றது அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு சில தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது. இது ஏற்கனவே துவண்டு கிடந்த அதிமுக தொண்டர்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது. தேர்தலுக்காக உழைத்த பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையேவும் லோக்சபா தேர்தலில் அதிமுக கண்ட தோல்வி எடப்பாடி பழனிச்சாமி மீது இருந்த நம்பிக்கையும் சுக்கு நூறாக உடைத்தது. இதிலிருந்து எப்படி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் மீட்டுக் கொண்டு வரப் போகிறோம் என அதிமுக சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் விக்கிரவாண்டி தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியானது தோல்வியால் துவண்டு கிடப்பவர்களிடம் மீண்டும் ஒரு தோல்வியை கொடுத்தால் நம்மிடம் இருப்பவர்கள் அனைவரும் மாற்றுக் கட்சிக்கு நிச்சயமாக தாவி விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். 

எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலமே விக்ரவாண்டியில் தோல்வி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதற்கானவே அதிமுக இதில் பின்வாங்குகிறது என கிசுகிசுக்கப்பட்டது. இதனிடையே 2026 தமிழக பொது தேர்தலில் எப்படியாவது அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் ஏனென்றால் தோல்விக்கு பிறகு அதிமுக ஒரு நிச்சய வெற்றியை கண்டுள்ளது என்பதை லோக்சபா தேர்தலில் முடிவுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நாம் கூறியுள்ளோம் அதை நிகழ்த்திக் காட்டாவிட்டால் இன்றைய அரசியல் சூழலில் அடுத்து ஆட்சி அதிகாரத்தை மறக்க வேண்டியதுதான் என சிந்தித்த எடப்பாடி நாம் தமிழர் கட்சியிடம் கூட்டணிக்கான ஆதரவை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த ஒரு கூட்டணியிலும் இடம் பெறாமல் தனித்துப் போட்டியிட்டு தொடர்ச்சியாக தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தி வருகிறது.

இதனால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால் பொது தேர்தலை வென்று விடலாம் என நினைத்து எடப்பாடி சீமானிடம் இது குறித்த ஆலோசனையை முன்வைக்க எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்துள்ளார் சீமான்! ஆனால் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, என் கோட்பாட்டில் கூட்டணி என்பதை கிடையாது அதுவும் திராவிட கட்சிகளுடன் என்னால் கூட்டணி வைக்க முடியாது அப்படி ஒரு வேளை கூட்டணி அமைத்தால் அது மாற்றமாக இல்லாமல் ஏமாற்றமாகத்தான் இருக்கும் என்று பொதுவெளியில் அதிமுகவுடன் இனி கிடையாது என்பதை நேருக்கு நேராக கூறியுள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.