அதிமுகவில் என்ன நடக்க போகிறது என பல நாட்களாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மற்றும் இன்னும் பலர் என்ன கூறி வந்தார்களோ இன்று அதே போல் நடந்து இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தொடுத்த இடையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்ததை ஏற்க முடியாது எனவும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பழைய நிலையே இருப்பதாக தெரிவித்து இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
இதில் பெரும் ட்விஸ்ட் என்ன என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த அடுத்த நொடியே பழனிசாமி தரப்பில் முக்கிய நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம் தேவையில்லாத வேலை கட்சி சின்னம் போனால் கட்சி அலுவலகமும் போய் விடும் கட்சி சின்னம் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்தில் எழுந்து நிற்கவே முடியாது என புலம்ப அதிர்ச்சி அடைந்து இருக்கிறது எடப்பாடி தரப்பு.
கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரியும் மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மனு மீது மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜனவரி 30 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது
அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடும் மகிழ்ச்சியில் ஓபிஎஸ் தரப்பும் கடும் அதிருப்தியில் ஈபிஎஸ் தரப்பும் இருக்கிறார்களாம்.
தேர்தல் ஆணையம் தெரிவித்த அடுத்த நொடியே.. பல மூத்த அதிமுக தலைவர்கள் ஏன் இப்படி வீணாக மோத வேண்டும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படலாமே இனியும் போட்டி போட்டு கொண்டு இருந்தால் இரட்டை இலை முடங்குமே தவிர கட்சி வளராது என்று கூறி வருகிறார்களாம்.
இடை தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் கனவு முடிவிற்கு வந்து விடுமோ என்ற கடும் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.