எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டு வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அண்ணாமலை டெல்லி பறந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் தேதியை அறிவிச்சதுமே திமுக காங்கிரஸ் கூட்டணி ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிச்சாங்க. ஆளுங்க கட்சி அப்படிங்கிறதால எப்படியாவது ஜெயிச்சே ஆகணுன்னு திமுக ஒரு பக்கம் அமைச்சர்கள் பலத்தையும், பண பலத்தையும் காட்டி ஈரோடு கிழக்கு தொகுதியை வளைக்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்க... இன்னொரு பக்கம் என்னடா அதிமுகவோட உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிச்சது.
பாஜக ஆதரவு கரம் வேண்டி இபிஎஸ், ஓபிஎஸ் டீம் வெயிட்டிங்கில் இருந்த நேரத்தில் தேமுதிக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களோட வேட்பாளர்கள வேக, வேகமா அறிவிச்சிட்டாங்க. இருந்தாலும் உட்கட்சி பூசல் காரணமா அதிமுக தங்களோட வேட்பாளரை அறிவிக்கிறது இழுபறி நீடிச்சிக்கிட்டு இருந்தது. அதிமுக சார்பா இபிஎஸ் - ஓபிஎஸ் என இரண்டு டீமும், பாஜகவின் ஆதரவுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்ததால, பாஜக தரப்புலையும் முடிவு சொல்ல கொஞ்சம் காலதாமதம் ஆச்சு. போதாக்குறைக்கு பாஜக தொண்டர்களும் நம்ப கட்சியோட பலத்த காட்ட இந்த இடைத்தேர்தல்ல பாஜக களமிறங்கியே தீரனுன்னு அண்ணாமலைக்கு அன்புக்கட்டளை போட ஆரம்பிச்சாங்க.
கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, முக்கிய நிர்வாகிகளோட விருப்பமும் அதாங்கிறதால அண்ணாமலையும் பல கட்ட ஆலோசனைகள்ல மூழ்கி இருந்தாரு. ஆனா இதை கொஞ்சம் கூட புரிஞ்சாகாத எடப்பாடி டீம் காலையில அவசர அவசரமா கே.எஸ். தென்னரசுவ வேட்பாளரா அறிவிச்சியிட்டாரு. ஏற்கனவே இரண்டு மொற ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வா இருந்திருக்காருங்கிறதால கே.எஸ். தென்னரசு தேர்வு செய்யப்பட்டிருக்கிறதா சொல்லப்படுது. அதிமுகவோட உட்கட்சி பூசலை ஊதி பெரிசாக்காமல் நல்ல முடிவா சொல்லுவோன்னு பாஜக காத்துக்கிட்டு இருந்தா, கூட்டணி கட்சியின்னு கொஞ்சமும் யோசிக்காம எடப்பாடி பொசுக்குன்னு வேட்பாளரை அறிவிச்சது பாஜக தொண்டர்கள கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கு.
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா
நவநீதன் என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுல எரியுற தீயில எண்ணெய்யை ஊத்துற கதையா? பாஜகவின் கடைக்கண்ணுக்காக காத்துக்கிட்டு இருந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி கூட போட்டி போடுறேன் பேர்வழியின்னு செந்தில் முருகன்ங்கிறவர வேட்பாளரா அறிவிச்சிட்டாரு. கேட்டால்... பாஜக வேட்பாளரை அறிவிச்சா நாங்க வாபஸ் வாங்கி வழி விடுறோம்ன்னு சொல்லியிட்டாரு.
ஆனா ஏற்கனவே அண்ணாமலை கூட இலை மறைக்காயா மோதல் போக்க கடைபிடிச்சிக்கிட்டு வந்த எடப்பாடி பழனிசாமி இப்போ வெளிப்படையாவே வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கு. தொண்டர்களையும் கடந்து தற்போது விஷயம் தலைமை வரைக்கும் போக, அண்ணாமலை டெல்லி பறந்திருக்கிறதா செய்தி வெளியாகியிருக்கு. அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர்கிட்ட எல்லாம் ஆலோசிக்கப்போற அண்ணாமலை, சென்னை வந்தது கால் வச்சதும் அதிரடி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கமலாயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது என்ன அதிரடி முடிவுன்னு விசாரிச்சதுக்கு, அண்ணாமலை வந்ததும் பாஜக வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பியிருக்கிறதா கூறப்படுது. ஏற்கனவே அதிமுக இரட்டை இலை சின்னத்திற்காக பாஜக நம்பியிருந்தது. எப்படியாவது சின்னத்தை வாங்கி கொடுத்தே ஆகணுன்னு எடப்பாடியும், ஓபிஎஸும் மாறி, மாறி டெல்லிக்கு படையெடுத்தாங்க. இப்போ தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தோட கையில இருக்குற நிலையில இரட்டை இலை அதிமுகவுக்கு கிடைக்குமா?.... முடக்கப்படுமா? அப்படிங்கிற சந்தேகமும் வலுத்துள்ளது.
ஒருவேளை பாஜக தனி வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில் ஓ.பி.எஸ். பின்வாங்க ரெடியா இருக்குறது அவருக்கு அட்வாண்டேஜாவும், எடப்பாடிக்கு டிஸ் அட்வாண்டேஜாவும் மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கணிந்துள்ளனர். ஏன்னா இப்போ அண்ணாமலைக்கு பெருகி வரும் செல்வாக்கும், அதிமுகவுக்குள்ள நடக்குற உட்கட்சி பூசலும் பாஜகவுக்கு பலமா மாறுவதால ஒருவேள பாஜக தனித்து போட்டியிட்டாலும் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை அள்ளலாம்ன்னு சொல்லப்படுது.