‘பகாசூரன்’ படத்தில் சுப.வீ, லூலூ வை இப்படியா தாக்குவது? மோகன் ஜி! பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ போன்ற சமூக கருத்துக்களைக் கொண்ட படங்களை இயக்கி வரும் மோகன் ஜி, அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டுள்ளனர்.
தனது முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டையில் நார்மலான கதைக்காலத்தை கையில் எடுத்த மோகன் ஜிக்கு அது மிகப்பெரிய வெற்றியாக அமையவில்லை. இதனையடுத்து ‘திரெளபதி’ படத்தில் நாடகக் காதல் மற்றும் போலி பதிவு திருமணங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமெடுத்தார். இதனையடுத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளிகள் எப்படி தப்பிக்கிறார்கள், இதனால் நல்ல காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருந்தார்.
தற்போது கல்லூரி மாணவிகளை ஆப் மூலமாக பாலியல் தொழில் தள்ளப்படுவது குறித்த கதைக்களத்துடன் ‘பகாசூரன்’ படத்தை எடுத்துள்ளார். ஒவ்வொரு முறை மோகன் ஜி-யின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், டீசர் ஆகியவற்றை வெளியிடும் போது தி.க, விசிக உள்ளிட்ட திராவிட மாடல் கட்சிகள் அனைத்துமே கொந்தளித்து போவது வழக்கம். இந்த படத்தில் சு.ப.வீரபாண்டியன் பேசிய டைலாக்கை நேரடியாக வைத்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பெண்கள் தங்களுக்கான சிற்றின்பத்தை தேடிக்கொண்டால் கள்ளக்காதல் என கொச்சைப்படுத்துகிறார்கள். நாம் அதனை திருமணம் கடந்த உறவு என்று தான் சொல்ல வேண்டும். இதனைப் பார்த்த தி.க, லூலூ குரூப் போன்றோர் இது எங்கள் கொள்கை என சோசியல் மீடியாவில் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் மக்களோ இது தான் உங்களுடைய திராவிட மாடலா?.. இப்படிப்பட்ட கொள்கையை கடைபிடிப்பது மட்டுமின்றி காப்பி ரைட்ஸ் வேறு கேட்கிறீர்களா? என சகட்டு மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.