தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தனது மூத்த மகன் தனது தந்தைக்காக செய்த காரியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ்நாட்டு அரசியல் உலகையும், சினிமா உலகையும் அதிர வைக்கும் விதமாக.. தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானார்.இவரின் மரண செய்தி அறிந்து ஒட்டு மொத்த தமிழகமே உறைந்தும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் சொல்லுண்ணா துயரத்தில் உள்ளனர். அவரை பார்க்க எங்கிருந்தோ எல்லாம் சாரை சாரையாக வண்டி கட்டி கொண்டு வருகின்றனர். திரை உலகிற்கு மட்மீன்றி அரசியல் பிரவேசத்திலும பேரிழப்பு என்றே சொல்லாம்.
இந்நிலையல், நிச்சயதார்த்தம் ஆகி 4 வருடம் ஆகியும் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிகளின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன். இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நிலை காரணமாகவே திருமணம் நடைபெறுவது தள்ளிப்போனது.விஜயகாந்த் தன்னுடைய மகன்களின் திருமணத்தை கண் குளிர பார்க்க வேண்டும் என ஆசை பட்ட நிலையில், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலேயே மண்ணில் சாய்ந்தார்., ஏராளமான ஏழை ஜோடிகளும், தன்னுடைய தொண்டர்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ள விஜயகாந்த்... தன்னுடைய சொந்த பிள்ளைகள் ஒருவரின் திருமணத்தை கூட கண்களில் காணாமல் நிரந்தரமாக கண் மூடிவிட்டார்.
அவரது இரண்டு மகன்களும் விஜயகாந்தின் உடல் அருகிலேயே எங்கும் அசையாமல் கண்ணீர் விட்டு அழுகின்றன்ர். இதனிடையே, அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதில்I MISS YOU SO MUCH APPA என எழுதி தனது தந்தை விஜயகாந்துடன் எடுத்த சிறுவயது புகைப்படத்தை நேற்றிரவு பகிர்ந்துள்ளது பார்ப்போரின் நெஞ்சை கலக்கமடைய செய்துள்ளது. துக்கம் தாளாமல் தந்தை விஜயகாந்த் தலை அருகிலேயே மகன்கள் இருவரும் அழுது கொண்டே இருக்கும் மகன்கள் இருவருக்கும் விஜயகாந்தின் ஆன்மா எப்போதும் அருகிலேயே இருந்து வழிநடத்த வேண்டும் என அவரது ரசிகர்கள், தொண்டர்கள் கூறிவருகின்றனர்.