தொடர்ந்து காவல்துறையினர் குறித்து தவறான கருத்துக்களை பரப்பிவரும் சினிமாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் அப்படி வைக்கவில்லை என்றால் நிலைமை மோசமாக மாறிவிடும், மாபெரும் ஆபத்தானது அதுவும் சினிமாவால் கெட்ட தமிழகத்தில் மகா ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- காவல் நிலைய ரைட்டர்களின் நிலைபற்றி படம் எடுத்துவிட்டார்களாம், வழக்கம் போல அதே அழுகை ஒப்பாரி
அதே ரைட்டர்தான் ராஜிவோடு செத்த 17 பேரில் ஒருவரான காவல்துறை அதிகாரி பற்றி எழுதினான், ராஜிவ் கொலை பற்றி எழுதினான்.அதே ரைட்டர்தான் புலிமற்றும் ஈழகோஷ்டுயால் சுட்டு கொல்லபட்ட காவலர் பற்றி எழுதினான், சந்தண வீரப்பனால் கொல்லபட்ட தன் சக காவல்துறையினர் 100 பேரை பற்றி கண்ணீர் வடிய எழுதினான்,
இன்றும் மணல் கொள்ளையர் முதல் எத்தனையோ கொள்ளையரால் கொல்லபடும் காவல் அதிகாரிகளை பற்றி கண்ணீர் வடிய எழுதுபவனும் அவனே. கோயம்புத்தூர் முதல் களியக்காவிளை வரை தன் சக போலிஸ்காரன் கொலையினை கண்ணீருடன் எழுதியவனும் அதே ரைட்டர்தான், அரசியல் குறுக்கீட்டால் குற்றவாளி தப்பிக்கும் கொடும் விதியும் அவனாலேதான் மனசாட்சியினை அறுத்து எழுதபடுகின்றது.
தா.கிருட்டினன் கொலைவழக்கு முதல் லீலாவதி, மதுரை பத்திரிகை எரிப்பு, அதிமுக கால அட்டகாச கொலைகளையெல்லாம் எழுதியவன் அதே ரைட்டரே, தைரியமிக்க இயக்குநர்களென்றால் லீலாவதி கொலை முதல் சர்ச்சைகுரிய கொலைகளை மனசாட்சியினை கொல்லவைத்து எழுதிய ரைட்டரின் வலிகளை, அவரை மிரட்டிய சக்திகளை சொல்லட்டும் பார்க்கலாம்.
காவல்துறையின் இன்னொரு வலிமிகுந்த பக்கமெல்லாம் சினிமாகாரன் கண்ணுக்கு தெரியாது, அவனுக்கு தெரிவதெல்லாம் காவல்துறை இரக்கமில்லாதது, கடுமையானது என்பது, காவல் அமைப்புகளை பற்றி மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்பும் சினிமாக்காரன் மேல் ஒரு அவதூறு வழக்கும் இங்கு பாயாது, அவன்மேல் சமூக விரோதி எனும் பட்டம் வராது. கண்ணியத்துக்கும் காவலுக்கும் உயிரை கொடுக்கும் அந்த துறையினை காசுக்கு ஆசைபடும் திரைபட கூட்டம் கொச்சைபடுத்தி களங்கபடுத்தும்
இவர்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது, காவல்துறை அன்பர்கள் பொதுநல வழக்கோ இல்லை சரியான எதிர்நடவடிக்கையோ எடுக்காமல் இது அடங்காது, காவல்துறையினை தவறாக சித்தரிக்கும் போக்குக்கு ஒரு முடிவு கட்டபட வேண்டும், ஆனால் யார் கட்டுவார்கள் என்பதுதான் தெரியவில்லை?
தமிழகத்துக்கு சினிமா முக்கியமா காவல் அமைப்பா என்றால் அந்த கேள்விக்கு இடமே இல்லாத அளவு காவலர் என சொல்லிவிடலாம், பின்னும் ஏன் சினிமா கோஷ்டி, காவல்துறையினை சீண்டிகொண்டே இருந்தாலும் அத்துறை அமைதியாக இருக்கின்றது என்பது தெரியவில்லை, சில விஷயங்களில் அதீத பொறுமை என்பது மாபெரும் ஆபத்தானது அதுவும் சினிமாவால் கெட்ட தமிழகத்தில் மகா ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.