பிரதமர் மோடி ஏன் புதிய வகை கார் பயன்படுத்துகிறார் என்ற கேள்விக்கு விடை அளித்து இருக்கிறார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- ஆம், பாரத பிரதமராக மோடிக்கு கொடுக்கபட்டிருக்கும் கார் ஜெர்மன் தொழில்நுட்ப தயாரிப்பு பென்ஸ் எஸ்650 எனும் அதி நவீன கார். இது முழுக்க பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம்,இந்த கார் தோட்டாக்களால் மட்டுமல்ல சிறிய ரக ஏவுகனைகளால் கூட தகர்க்க முடியாது, பெரும் வெப்பத்தில் உருகாது, எவ்வகை தாக்குதலுக்கும் அசையாது, அதன் டயர்களும் இதர வெளிதாக்குதல் இலக்குகளும் வலுவானவை, விஷவாயு தாக்குதல் நடத்தினால் கூட அதை தடுக்கும் அளவு வசதிகள் செய்யபட்டுள்ளன.
இப்பொழுதெல்லாம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுதல், கண்ணிவெடி வைத்தல் போன்ற அச்சுறுத்தலை தவிர்த்து வானில் இருந்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்துதல், தானியங்கி மோட்டார் தாக்குதல் நடத்துதல் என தாக்குதல் வழிகள் மாறிவிட்டன, இதனால் பாதுகாப்பு வலுபடுத்துதல் அவசியமாகின்றது. இப்படி ஒரு கார் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இந்தியாவில்தான் உருவாக்கபட்டது, இதனாலே அதன் விலை மட்டுபடுத்தபட்டிருக்கின்றது இந்த விவகாரத்தை பொறுத்தவரை மோடி எனும் தனி மனிதனுக்கான பாதுகாப்பு அல்ல, முன்பு பிரதமரின் தனி விமானம் வலுபடுத்தபட்டது போல அவரின் காரும் புதிதாக வலுபடுத்தபட்டிருக்கின்றது, இது அவசியமானது.
இதனை நாளை இன்னொரு பிரதமர் வந்தால் அவருக்குத்தான் இது பயன்படுமே தவிர மோடி இதனை வீட்டுக்கு தூக்கி செல்ல முடியாது, மோடிக்கு தகப்பனுமில்லை மகனுமில்லை இதனால் அடிக்கடி கார் வாங்கி கொடுக்க யாருமில்லை. தேச பிரதமரின் பாதுகாப்பு கருதி அவரின் மெய்காப்பாளர் குழு கொடுத்த பரிந்துரை நிறைவேற்றபட்டிருக்கின்றது அவ்வளவுதான் விஷயம் என்று ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இளம் நடிகர்களே சொகுசு காரில் பயணம் செய்யும் போது 100 கோடி இந்தியர்களின் அடையாளமான பிரதமரின் பாதுகாப்பிற்கு புதிய கார் வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள், இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிந்து கொண்டவர்கள் பிரதமரின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி அறிந்தவர்கள்.