மேற்குவங்கம் : வடகொரியாவில் அல்லது சீனாவில் நடக்கும் அட்டூழியங்கள் வெளியுலகின் கவனத்திற்கு வெளிவருவதில்லை. அதேபோல மேற்குவங்கத்தில் நடக்கும் அரசியல் படுகொலைகள் மற்றும் ஊழல்கள் பெரும்பாலும் வெளியே வராமல் பார்த்துக்கொள்கின்றன அங்கிருக்கும் ஊடகங்கள். அதிலும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மமதா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் " ஆளும் அரசுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டால் மட்டுமே செய்தி நிறுவனங்களுக்கு அரசு சார்பில் விளம்பரம் தரப்படும்" என பேசி கடும் சர்ச்சையை கிளப்பினார் முதல்வர் மமதா. இந்நிலையில் ஆசிரியர் நியமனம் ஆசிரியர் அல்லாதோர் நியமனம் இவற்றில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எஸ்.எஸ்.சி எனப்படும் பள்ளிச்சேவை ஆணையத்தின் பரிந்துரையின்படி மேற்குவங்க இடைநிலைக்கல்வி வாரியம் செய்த சட்டவிரோத நியமனங்கள் குறித்து விசாரிக்க கொல்கொத்தாவின் ஒற்றை பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. அதை தடைசெய்ய கொரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்து சிபிஐ விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சின் உத்தரவையடுத்து நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தலைமையிலான ஒற்றை பெஞ்ச் மாநில முன்னாள் கல்வித்துறையமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை வருகிற புதன்கிழமை மாலை 6 மணிக்குள் மத்திய புலனாய்வுத்துறையின் அலுவலகத்திற்கு நேரில் வருமாறு உத்தரவிட்டுள்ளது. நீதியை நிலைநாட்ட பார்த்தா சட்டர்ஜி ராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பதாக நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மாநில கல்வித்துறை அமைச்சராக சட்டர்ஜி இருந்தபோது இந்த முறைகேடான நியமனங்கள் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநில அரசின் உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் க்ரூப் சி மற்றும் டி பணியாளர்களை நியமிக்க மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஐந்துபேர் கொண்ட குழு சட்டவிரோதமானது என கூறியுள்ள நீதிபதி கடுமையாக அமைச்சரை சாடியுள்ளார்.
மேலும் சட்டர்ஜி தற்போது மமதாவின் அமைச்சரவையில் தொழில்,வர்த்தகம் மற்றும் நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மமதாவின் மருமகனான அபிஷேக் மீது முறைகேடாக நிலக்கரி சுரங்க ஒப்பந்தம் வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பியது கவனிக்கத்தக்கது.