புதுதில்லி : இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பல்களில் INS விக்ரமாதித்யா மட்டும் தற்போது கடற்படைப்பணியில் உள்ளது. இந்திய கடற்படைக்கு மேலும் விமானம் தாங்கி போர்கப்பல்களில் நிலைநிறுத்த விமானங்கள் தேவைப்படும் நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட போர்விமானங்களின் சோதனைப்பயிற்சிகள் நடைபெற்றுள்ளது.
இதற்காக அமெரிக்காவின் F-18 மற்றும் பிரெஞ்சு ரபேல் போர்விமானங்களுக்கிடையே சோதனை நடத்தப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படையில் உள்நாட்டு மயமாக்கல் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கடற்படை துணைத்தலைமை அட்மிரல் எஸ்.என்.கோர்மெட் பயிற்சிகள் பற்றி குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில் " பிரெஞ்சை சேர்ந்த ரபேல் போர்விமானமும் அமெரிக்க போயிங் நிறுவனத்தை சேர்ந்த F-18 போர்விமானமும் விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து செயல்படும் திறனை நிரூபித்துள்ளன. எங்களது நோக்கம் உள்நாட்டு மயமாக்கல் மட்டுமே. ஆனால் அதற்க்கு சிறிது காலம் தேவைப்படும். நம்மிடம் இரட்டை இன்ஜின் தளம் சார்ந்த போர்விமான திட்டங்கள் உள்ளன.
அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தற்போது போர்விமானங்களை வாங்குகிறோம். நாங்கள் நாட்டில் உள்நாட்டு மயமாக்கலை ஊக்குவிக்க விரும்புகிறோம். இதற்கான திறன்களை வளர்த்து எதிர்காலத்தில் உள்நாட்டு மயமாக்கல் மற்றும் தொழிநுட்பங்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்திவருகிறோம்" என கடற்படை அட்மிரல் தெரிவித்தார்.
மேலும் இந்தியா 75 எனும் திட்டத்தின் கீழ் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் முயற்சியில் தற்போது இந்திய கடற்படை திட்டமிட்டு வருகிறது. இதற்காக DRDO மற்றும் HAL நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த மற்றொரு நிறுவனம் இணைந்து அதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.