24 special

இதை என்னான்னு தட்டி கேளுங்க சுந்தரவள்ளி ...! விக்கிரமன் புகார் போனதுக்கு அப்புறம் என்னாச்சு தெரியுமா...!

Vikraman,thirumavalavan
Vikraman,thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளராக இருந்து வருகின்ற விக்ரமனுக்கு எதிராக கிருபா முனியசாமி என்ற பெண் புகார் அளித்தது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது 2013ஆம் ஆண்டு கிருபா முனியசாமி விருந்தினராக கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் விக்ரமனை சந்தித்துள்ளார், பிறகு 2020 ஆகஸ்டில் அவர் லண்டன் சென்றபோது விக்ரமன் தானாக முன்வந்து விமான நிலையத்திற்கு அவரை வழி அனுப்பதற்கு வந்ததாகவும், இரண்டு மாதங்களுக்கு பிறகு தன்னை காதலிப்பதாகவும் விக்ரமன் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னை அழைப்பதாக கூறி இவரே தானாக சேர்ந்துள்ள செய்தியும் கிருபா முனியசாமிக்கு தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு அரசியல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பணரீதியாகவும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விக்ரமன் கிருபாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில உதவிகளை கிருபாவும் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்க கிருபா ஆரம்பித்த பொழுது ஜாதி ரீதியாக விக்ரமன் அவரை மிரட்டி உள்ளார்! 


மிரட்டிய காரணத்திற்காக கிருபா விக்ரமனிடமிருந்து விலக முயன்ற காலங்களில் எல்லாம் தன்னை மன்னிக்கும் படியும் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சியும் மீண்டும் உறவில் இருக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த அழுகை மற்றும் கண்ணீர் எல்லாம் சில நேரங்களில் மட்டும் தான் ஆனால் அவரது குணம் மாறாமல் அப்படியே இருந்தது என்றும் ஜூலை 22 பணத்தை திருப்பி தருவதாக கூறி வாங்கிய பணம் இன்றளவும் திருப்பித் தரவில்லை என்றும், அதைப் பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் தன்னை பிளாக் செய்தும் பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இதற்குப் பிறகு அவர் பிக் பாஸ் செல்வதற்கு முன்பாக என்னிடம் மன்னிப்பு கேட்டு சென்றார் பிறகு பிக் பாஸ் எனக்கு வந்த பிறகு என்னிடம் மறுபடியும் பல வாதங்கள் நடைபெற்று மன்னிப்பு கேட்டு பிறகு இருவரும் காதலன் இருந்தும் இருப்பினும் அவர் என்னை பலவாறு துன்புறுத்தி பிறகு மன்னிப்பு கேட்டு என்னை பயன்படுத்திக் கொண்டு மட்டுமே இருந்துள்ளார். இதற்குப் பிறகுதான் அவர் தன்னுடைய முன்னாள் காதலி என்று கூறி கிட்டத்தட்ட 15 பெண்களுடன் தொடர்பில் வைத்துள்ளார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது அதை நானே தான் கண்டுபிடித்தேன் என்று கிருபா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இப்படி பலரையும் ஏமாற்றிய காரணத்தினால்  விக்ரமன் மீது புகார் கொடுக்க உள்ளேன் என்று அவரிடம் அறிவித்த கிருபாவை உனக்கு சின்ன ஆட்களை மட்டுமே தெரியும் எனக்கு பெரிய பெரிய ஆட்களை எல்லாம் தெரியும் என்று மிரட்டி உள்ளார் விக்ரமன். இதை அடுத்து, விக்ரமன் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆதாரங்களையும், 20 பக்க புகாரையும் விசிக கட்சியிடம் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வீசி காவின் தலைவர் திருமாவளவன் கட்சியின் இணை செய்தி தொடர்பாளராக உள்ள விக்ரமன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள கௌதமசன்னா, சந்திரகுமார், கனல்விழி, சுந்தரவள்ளி மற்றும் செம்மலர் என்ற ஐந்து நிர்வாகிகளை ஒரு குழுவாக அமைத்து புகார் கொடுத்த மற்றும் புகார் சுமத்தப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் அந்த இரண்டு விசாரணைகளையும் பதிவு செய்து 15 நாட்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில் திருமாவளவன் கையெழுத்திட்டு உள்ளார். 

அந்த விசாரணையில் எட்டு சாட்சி ஆதாரங்களை கிருபா சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது, இருப்பினும் இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க 40 நாட்கள் எடுத்துக்கொண்டு தற்போது ஒரு மாதமாகியும் இந்த குழு கிருபாவிடம் எந்த ஒரு அறிக்கையும் கொடுக்காமல் இருந்து வருவதாகவும் இதைப்பற்றி கேட்க போனால் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அதைப் பற்றி பேசவே மறுத்து பயப்பட்டு வருகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தி உள்ளார் பாதிக்கப்பட்ட கிருபா முனியசாமி. இப்படி விக்ரமன் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி தன்னை மாட்டி விடப் போகிறார் என்ற அச்சத்தில் திருமாவளவன் இனிமேல் விக்ரமனை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என கட்சியினர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.