24 special

இன்பநிதிக்கு முட்டுக்கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட காயத்தி ரகுராம்! கட்சிக்குள் எப்படி இருந்தவங்க நீங்க ?

gayathrirahuram
gayathrirahuram

ஒரு காலத்தில் டெல்லி பயணம், முதல்வர் மீதான விமர்சனம், திருமாவளவன் கருத்துக்களை எதிர்த்து நேரடியாக பதில் கொடுத்தது என ஊடகங்களில் முன்னிலை பெற்று பாஜகவில் விரல்விட்டு  என்ன கூடிய தலைவர்களில் ஒருவராக இருந்தார் காயத்ரி ரகுராம்.தன்னை பற்றி ஆபசமாக பேசிய திமுக நிர்வாகிக்கு எதிராக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த உடன் நில்லாமல், தேசிய மகளிர் ஆணையம் வரை சென்று டெல்லியில் பாஜக நிர்வாகியாக கெத்து காட்டினார், திருமாவளவன் குறித்து பேசியதற்கு விசிகவினர் காயத்ரி வீட்டை முற்றுகையிட தைரியம் இருந்தால் திருமாவளவனை நேரில் என்னுடன் விவாதம் செய்ய வர சொல்லுங்கள் என கெத்தாக பதில் சொல்லி பாஜக நிர்வாகியாக செயல்பட்டார் காயத்ரி.


ஆனால் தற்போது பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், தன்னை எதிர்த்து ஆபாசமாக பதிவு போட்டார் என்று தேசிய மகளிர் ஆணையத்தில் திமுக நிர்வாகிக்கு எதிராக புகார் கொடுத்த திமுகவில் சேர்த்து கொண்டாலும் இணைவேன் என கூறியது காயத்ரி ரகுராமின் அரசியல் அனாதை நிலைப்பாட்டை காட்டுவாதக விமர்சனம் எழுந்த சூழலில் தற்போது அதை காட்டிலும் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளார் காயத்ரி.

இன்பநிதி பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அதனை செய்ததும் பாஜக எனவும் அண்ணாமலை எனவும் குறிப்பிட்ட காயத்ரி, நேரடியாக இப்போது இன்பநிதிக்கும் முட்டு கொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திமுகவினரே, ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி என்று தான் அடக்கி வாசிகின்றனர் பெரும்பாலான திமுக உறுப்பினர்கள் கூட இன்பநிதி புகைப்படம் வெளியானது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை ஆனால் முந்தி கொண்டு தனது ராச விஸ்வாசத்தை காட்டும் வகையில் காயத்ரி செயல்பட்டு இருபது... ஒரு காலத்தில் பாஜகவில் எப்படி இருந்த பெண்...!

தனது நடவடிக்கை காரணமாக இன்பநிதிக்கு எல்லாம் முட்டு கொடுக்கும் பறிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறாரே என பேசுகின்றனர் பொது மக்கள், ஒரு வேலை மதுரை சரவணன் போன்று காயத்ரி ரகுராமும் திமுகவில் சேர்த்து கொள்ளபடவில்லை என்றால் இன்ப நிதி நடன மையம் ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.

மொத்தத்தில் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபடாமல் மோதல் போக்கை கடைபிடித்தால் இறுதியில் காயத்ரி ரகுராமிற்கு ஏற்பட்ட பரிதாப நிலைமைதான் உண்டாகலாம் என்பது கடந்து இரண்டு மாதங்களில் தமிழகம் வெளிப்படையாக உணர்ந்த உண்மையாக பார்க்க படுகிறது.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என கூறும் திரைப்பட வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? காயத்ரி ரகுராமிற்கு 100% பொருந்தி இருப்பது அவரது ட்விட்டர் பதிவுகள் மூலம் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.