24 special

முடிஞ்சா போடு … இல்லன்னா ஓடு… மீண்டும் தெறிக்கவிட்ட அண்ணாமலை!

Annamalai
Annamalai

தமிழகத்தில் நேற்றைய தினம் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்ற தகவல் கமலாலயத்தில் இருந்து அதன் ஊடக தொடர்பாளர் ரங்கா அழைப்பு விடுத்த மறு நிமிடமே, ஊடகதுறையில் எப்படியாவது பாஜகவை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என செயல்படும் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் நபர்கள் 4 கேள்விகளை தயார் செய்தனர்.


ஒன்று வாட்ச் மற்றொன்று காயத்ரி ரகுராம், ஹனி டிராப், திமுக மீது சொல்லப்படும் ஊழல் குற்றசாட்டுகள் குறித்த ஆதாரங்கள் இதை வைத்து நான்கு புறமும் அண்ணாமலையை கட்டம் கட்ட வேண்டும் என குரூப் மீட்டிங் மாற்றத்திற்கான ஊடக சங்கம் என்ற ஒரு அமைப்பின் மூலம் தயார் செய்து வந்து இருந்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல் எப்படியாவது அண்ணாமலையை கவிழ்க்க வேண்டும் என திட்டம் போட்டு அதன் படி கேள்வி கேட்க, அதைப்பற்றியெல்லாம் கவலை படாமல் வெளுத்து எடுத்து இருக்கிறார் அண்ணாமலை, திமுக குறித்த ஊழல் குற்றசாட்டிற்கு ஆதாரம் இருக்கிறது உன் சேனலில் போடு பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் நேரே வா தருகிறேன் என குறிப்பிட்டார் அண்ணாமலை.

அதே போல் தனியார் ஊடக ரிப்போர்டரிடம் ஊழல் குற்றசாட்டு குறித்த ஆதாரங்களை ஒப்படைத்தார், ஆனால் அண்ணாமலை அலுவலகத்திற்கு வந்தால் தான் செய்தியாக போடுவோம் என பல்டி அடித்தார் ரிப்போர்டர், இதையடுத்து அண்ணாமலை புடி புடி என புடிக்க ஓட்டம் எடுத்துவிட்டார்கள் அலுவலகத்தில் கூடி இருந்த பத்திரிகையாளர்கள்.

இது பலருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் தெரியாத நிகழ்வு ஒன்று அரங்கேரி இருக்கிறது, அண்ணாமலை அலுவலகத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் வந்து ஏன் அவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்க அண்ணாமலை உன் வேலைய பாரு போ அப்படிதான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவா செயல்பட்டா பேசுவேன்.

முடிஞ்சா போடு இல்லை ஓடு என வெளுத்து எடுத்து இருக்கிறார், சப்போர்டிற்கு ஆளை கூட்டி கொண்டு சென்ற தனியார் டிவி நிருபரையும் இந்தா ஆதராம்  நாளைக்கு உன் டிவியில் போடு என விரட்டி அடித்து இருக்கிறார் அண்ணாமலை இந்த வீடியோ காட்சிகளை செப்போனில் தெரியாமல் ரெகார்ட் செய்து குறிப்பிட்ட கட்சி ஊடகம் வெளியிட தங்களுக்கு ஆதரவாக மக்கள் செயல்படுவார்கள் என கணித்து இருந்தார்களாம்.

ஆனால் மக்களோ அண்ணாமலை செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பியது சரிதான் என அதே வீடியோவிற்கு கீழே கமெண்ட் அடிக்க என்ன செய்வது என விழி பிதுங்கி இருக்கிறதாம் பத்திரிகையாளர் போர்வையில் அண்ணாமலையை கவிழ்க நினைத்த கும்பல்.

விஜயகாந்தை ஊடகங்கள் கோவகாரர் என உருவக படுத்திய போது சமூக வலைத்தளங்கள் பெரும் வளர்ச்சி பெறவில்லை ஆனால் தற்போது ஊடகங்களை காட்டிலும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதால் பத்திரிகையாளர்கள் முகமும் வெளியே தெரிய தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.