விஜய் அஜித் சட்ட மன்ற பொது தேர்தலில் வாக்களிக்க வந்த போது அஜித்தின் மாஸ்க்,விஜய்யின் சைக்கிள் ஆகியவை கொண்டு திமுகவிற்கு ஆதரவாக குறிப்பால் உணர்த்துகிறார்கள், என திமுக ஆதரவாளர்களும், சில ஊடகங்களும் கொளுத்தி போட்டனர்.
அப்படி ஊடகங்கள் கொளுத்தி போட்ட சம்பவத்திற்கு அதே குறிப்பால் பதிலடி கொடுத்துள்ளார் புதுவை கவர்னர் தமிழிசை, முதல்வராக முதல் முறை பொறுப்பேற்ற ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து. தெரிவித்தார் தமிழிசை அப்போது அவருக்கு காவி நிற பையில் கிப்ட் கொடுத்தார், அதில் சில புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
இவை ஆன்மீக நூல்கள் என கூறப்படுகிறது,இந்நிலையில் ஆளுநர் தமிழிசை காவி பையில் கிப்ட் கொடுத்தது குறிப்பாக இந்தியா மட்டுமல்ல தமிழகமும் ஆன்மீகம் பூமி என்பதை குறிப்பால் உணர்த்தியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க, திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழசைக்கு தலைவரை கலாய்பதே வேலையாக போச்சு எனவும் உடன்பிறப்புகள் கதறி வருகின்றனர், ஆமாம் வழக்கமாக துணிகளில் கூட கலரை பார்த்து குறிப்பால் உணர்த்திவிட்டார்கள் என வாய் கிழிய விளக்கம் கொடுக்கும் தமிழக ஊடகங்கள் ஏன் தமிழிசை காவி பை கொடுத்ததை குறித்து எந்த தகவலையும் கூறவில்லை.