24 special

போச்சே! போச்சே!!... பாஜக பற்றி வதந்தி பரப்பிய ஜிக்னேஷ் மேவானிக்கு பழங்குடியின மக்கள் கொடுத்த சவுக்கடி!

Modi, Jignesh Mevani
Modi, Jignesh Mevani

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இம்முறை பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவி வந்தது. 


இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டையும் ஓரங்கட்டிவிட்டு குஜராத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. வரலாற்றிலேயே 7வது முறையாக ஒரே மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையும் பெற்றுள்ளது.  இதற்கு முன்னதாக பாஜக 1995, 1998, 2002, 2007, 2012, 2017 ஆகிய தேர்தல்களிலும் தொடர்ந்து பாஜகவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலமாக வரலாற்று சாதனையை மட்டுமல்ல மாபெரும் உண்மையையும் பாஜக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆம், 1 மணி நிலவரப்படி பாஜக 158 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் குஜராத் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் 26 தொகுதிகளும் அடங்கும்.  இதன் மூலம் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பாஜக ஆபத்தான கட்சி என  ஜிக்னேஷ் மேவானி போன்ற அதிமேதாவிகள் சொல்லி வந்து பொய் என்பதை மக்கள் தங்களது வாக்குகள் மூலம் நிரூபித்துள்ளனர். 

குஜராத்தில் பழங்குடியின மக்களின் ஆபத்பாந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த ஜிக்னேஷ் மேவானி, இடஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சிக்கிறது, பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ஒடுக்கப்பார்க்கிறது என பாஜக அரசு மீது தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார். அவர் செய்து வந்த போலி பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. 

பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்காம் தொகுதி கடந்த முறை சுயேட்சை வேட்பாளராக வென்ற ஜிக்னேஷ் மேவானி, இந்த முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கி மண்ணைக் கவ்வியுள்ளார். பாஜக சார்பில் ஜிக்னேஷ் மேவானியை எதிர்த்து போட்டியிட்ட மணிபாய் ஜெதாபாய் வகேலா முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல் குஜராத்தில் காங்கிரஸ் ஒரே ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி 4 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

- அன்னக்கிளி