பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள நிலையில் எந்த ஆண்டும் இல்லாத புதிய சாதனையை நோக்கி பாஜக செல்கிறது, குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கவுள்ளது. கிட்டத்தட்ட 150 தொகுதிகளில் 2002 சட்டசபைத் தேர்தலில் 127 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதுதான், குஜராத்தில் பாஜக கைப்பற்றிய மிக பெரிய உச்சமான தொகுதிகளின் எண்ணிக்கை.
தொடர்ச்சியாக 27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது, இந்த முறை பாஜக தோல்வியை தழுவும் எனவும் பாலம் இடிந்து விழுந்து மக்கள் இறந்ததை மையமாக கொண்டு எல்லாம் பாஜக மீது தமிழகத்தை சேர்ந்த ஊடகத்துறையை சேர்ந்த பலரே விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த சூழலில்தான் இன்று அனைவரது முகத்திலும் கரியை பூசும் விதமாக வரலாற்றில் எப்போதும் இல்லாத விதமாக 150 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று குஜராத்தை 7 வது முறையாக கைப்பற்றியுள்ளது மோடியின் பாஜக.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவதே மிக பெரிய சாதனை தமிழகத்தில் திமுக இதுவரை ஒருமுறை கூட இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்தது கிடையாது அப்படி இருக்கையில் 7 வது முறையாக தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்து இருக்கிறது பாஜக.
இதுதான் குஜராத் மாடல் என்பதை நிரூபித்து இருக்கிறது குஜராத் பாஜக , குஜராத் தமிழர்கள் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுக்கையில் நாங்கள் இலவசம் பார்த்து வாக்கு அளிக்க மாட்டோம் எங்களுக்கு இலவச வேட்டி சேலை தேவையில்லை வளர்ச்சி திட்டங்கள் தான் தேவை நாங்கள் எப்போதும் மோடிக்கு தான் வாக்கு அளிப்போம் என அன்றே கூறியது போல் நிரூபணம் நடந்துள்ளது.
எப்படியாவது பாஜக குஜராத்தில் தோல்வி அடைந்தால் அதை வைத்தே பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அரசியலை முன்னெடுக்கலாம் என நினைத்த ஒவ்வொருவருக்கும் வரலாற்றில் இல்லாத அளவு வெற்றியை கொடுத்து கரியை பூசி இருக்கிறார்கள் குஜராத் மக்கள்.