குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 182 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் ஆளும் குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தலில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2017 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 71.28 சதவீதம் என்ற அளவை விட குறைவு. முதல்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குகளும், 2-வது கட்டத்தில் 64.39 சதவீத வாக்குகளும் பதிவாகின.
குஜராத்தில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடந்த முறை வலுவான போட்டி நிலவியது வழக்கமாக இரு முனைப் போட்டியாக இருக்கும் குஜராத் தேர்தலில், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாக களத்தில் இறங்கியது.
எந்த ஆண்டும் இல்லாத முறையாக இந்த ஆண்டு பாஜக மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150 ற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று கைப்பற்றும் நிலையில் உள்ளது, இதையடுத்து பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவபா ஜடேஜா பாஜக சார்பில் குஜராத் தேர்தலில் போட்டியிட்டார், ஜாம் நகர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 12000 வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா முன்னிலை பெற்று வருகிறார்.
இது ஒருபுறம் என்றால் வழக்கம் போல் தமிழகத்தை சேர்ந்த மீம் கிரேட்டர்கள் தங்களுக்கு எதிர் தரப்பை கிண்டல் விமர்சனம் செய்யும் விதமாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர், அதில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா மனைவி குஜராத் தேர்தலில் அடித்த சிக்ஸர் பந்து தமிழகத்தில் நெறியாளராக இருக்கும் செந்தில் தலையில் விழுந்தது போன்று மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாஜகவை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாடு கொண்ட செந்தில் எப்போதும் பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை கூறிவருபவர் அப்படி இருக்கையில் குஜராத் தேர்தலில் பாஜக மிக பெரிய வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் கலாய்த்து வருகின்றனர் பாஜக ஆதரவு நெட்டிசன்கள்.
மோடி எதிர்பாளர்கள் எப்படியாவது மோடி எதிலாவது வீழ்வார், விமர்சனம் செய்யலாம் என எதிர்பார்த்து காத்து இருக்கும் சூழலில் அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக குஜராத்தில் மிக பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது மோடியின் படை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.