பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அண்ணாமலை, எல்.முருகன் ஏற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவுக்கு செப்டம்பர் 17 முக்கியமான நாள். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்.
இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம். ஆனால், உண்மையான சமூகநீதியை வழங்கிவரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது” என்று தெரிவித்தார்.பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை என்ற அவர், நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவருடைய பிறந்தநாளை அடுத்த 20 நாட்களும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என்றார்.
இந்நிலையில் இன்று திராவிட கட்சியை தோற்றுவித்தவரான தந்தை பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் 142வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்க தலைவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். ட்விட்டரிலும் அவரது பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில் அரசியல் நிலைப்பாட்டில் இருவேறு பக்கங்களை சேர்ந்தவர்களான இருவரது பிறந்தநாளும் ஒரே நாளில் வந்துள்ளதால் இருவருடைய தொண்டர்களிடையேயும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் சூடுபிடித்துள்ளது. பலர் சக தலைவர்களை திட்டியும் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருவதால் ட்விட்டரில் மோதல் எழுந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு இன்றைய தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது இந்நிலையில் உண்மையான சமூக நீதி காவலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது , கா சட்டம் ,முத்தலாக் தடை ,மகளிர் வளர்ச்சி ,உலகில் கொரோனவை சிறப்பாக கையாண்ட அதிக மக்களை தொகை கொண்ட நாடு ,அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளிக்கும் பிரதமர் என்பதை பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர் .
தமிழகத்தில் தீண்டாமையையோ ஒழிக்க பாடுபட்டவர் , திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர் என்று பெரியார் ஆதரவாளர்கள் பேசுகின்றனர் இந்நிலையில் இருவரில் உங்கள் தேர்வு யார் என கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கவும் , உங்களுடன் ஒத்த சித்தாந்தம் கொண்ட நபர்களுக்கும் பகிரவும் .
சமூக நீதியின் உண்மையான காவலர் யார்? #HappyBdayModiji#பெரியார்#சமூகநீதிநாள்
— TNNEWS24Air (@tnnews24air) September 17, 2021