Tamilnadu

இந்த வயசுலயும் பாட்டி பண்ணிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!

Grandma
Grandma

இன்றைய உலகத்தில் விலைவாசிகள் எல்லாமே மடமடவென்று உயர்ந்து கொண்டே போகிறது. அத்தியாவசிய பொருளான பால் போன்றவற்றிற்கு கூட நிலையான விலை என்பது கிடையாது என்ற அளவிற்கு தற்போதைய சமுதாயம் உருவாகி வருகிறது. மேலும் பல உணவுப் பொருட்களில் புதிய புதிய வகைகள் உருவாக்கி அவற்றிற்கு நிறைய விடைகளும் வைத்து விற்கின்றனர். கண்ணை கவரக்கூடிய வகையில் பல உணவுப் பொருட்களை அலங்கரித்து பார்த்த உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு இன்று நிலைமை மாறிவிட்டது.சமீபத்தில் கூட தோசையில் கூட சீஸ் தோசை, பல வகையான காய்கறிகள் மற்றும் ஆனியன் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் கலர்ஃபுல்லான தோசை என்ன தோசையிலேயே பல வகைகளை நம்மால் பார்க்க முடிகிறது. அதனைத் தொடர்ந்து இட்லிகளும் தற்போது புதிய புதிய வகைகளில் ஒரு ஒரு ருசியில் உருவாக்கப்பட்டு சமைத்து விற்கப்படுகிறது.


அவற்றிற்கும் ஒவ்வொரு வகையான இட்லியிலும் ஒவ்வொரு வகையான விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. முதலில் பசிக்கு சாப்பிடுவது தற்போது ருசிக்கு சாப்பிடுவது என மாறிவிட்டது. உணவகங்கள் கூட இன்று முழுமையான வியாபார நோக்கத்துடன் செயல்பட ஆரம்பித்துவிட்டது. சமூகத்தில் பணத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அனைவருமே பணத்தை தேடி இது போன்று விலைவாசிகளை உயர்த்தி உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். எவ்வளவு வருமானம் வந்தாலும் கூட பத்தாமல் அவற்றை மென்மேலும் அதிகரிப்பதற்காக பல யுக்திகளை மேற்கொண்டு வியாபார நோக்குடன்  அதிகமான விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது ஒரு வயதான மூதாட்டி ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தள்ளாடும் வயதிலும் அசத்தலான ஒரு விஷயத்தை செய்து வருகிறார்!!! தற்போது அவர் செய்யும் சூப்பரான விஷயம் வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!! அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பது  என்னவென்றால்.. தன்னுடைய பெயர் கமலாதா என்றும், வடிவேலம்பாளையம் என்னும் ஊரில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த 50 வருடமாக இட்லி செய்து வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். முதலில் 50 பைசாவிற்கு இட்லி விற்பனை செய்ததாகவும் தற்போது ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். ஆனா எப்படி வியாபாரம் ஆகிறது இந்த விலையில் விற்பனை செய்தால் என்று அனைவரும் கேட்பீர்கள்!!! வருபவர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த அரிசி உளுந்து போன்றவற்றை கொடுக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த செயலை செய்யவில்லை என்றும் பசியில் வரும் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் நோக்கத்துடன் தான் இதை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்!!!

இவ்வாறு இவ்வளவு வயதாகியும் கூட தள்ளாடும் நிலைமையில் இருந்தும் கூட மன தைரியத்துடன் இதுபோன்று மிகக் குறைந்த விலையில் இட்லி  செய்து விற்பனை செய்து வரும் பாட்டியை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது. அதுவும் இன்றைய உலகத்தில் பணத்தினை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கும் பலரை நம்மால் பார்க்க முடியும் ஆனால் இந்தப் பாட்டியோ ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவது தற்போது அனைவரின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தற்போது இந்த பாட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தை பெற்று வருவதோடு பலருக்கும் முன் உதாரணமாக இவர் இருந்து வருகிறார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!!!