தமிழகத்தில் தற்போது இரண்டு பிரதான கட்சிகள் மட்டும் கிடையாது மூன்றாவதாக பாஜகவும் தற்போது அதிமுக திமுகவிற்கு இணையான ஒரு கட்சியாக வளர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது அபரிவிதமானதாக உள்ளது, இதற்கு முக்கியமாக அதன் மாநில தலைவராக தற்போது பொறுப்பு வகுத்து வரும் அண்ணாமலை என்றும் அவரின் முற்போக்கான செயல்பாடுகள் அதிரடி நடவடிக்கைகள் செய்தியாளர்கள் மத்தியில் ஆளும் கட்சியை திணற வைக்கின்ற அளவிற்கு முன் வைக்கும் கேள்விகள் அனைத்துமே பாஜகவை தமிழகத்தில் வேரூன்ற வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாகவும் தமிழகத்தில் பாஜக இருந்துள்ளது ஆனால் அப்போது இருந்ததை விட தற்போது பாஜக அதிகமாக வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது என்றும் சாமானிய மக்கள் பாஜகவை தற்போது பெரிதும் ஆதரித்து வருகிறார்கள் ஏனென்றால் அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தமிழக முழுவதும் மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தார்.
இதில் பாஜக கட்சியினர் செய்த நடவடிக்கைகள் ஏற்பாடுகளையும் தாண்டி மக்கள் அண்ணாமலையை பார்ப்பதற்கு குவிந்த கூட்டம் அண்ணாமலை பார்ப்பதற்கு மக்கள் கொண்ட பற்று சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை கடு வெயில் என்று பாராமல் மழையிலும் இரவு நெடு நேரத்திற்கு பிறகும் கூட்டமாக காத்திருந்து அண்ணாமலை வருவதை திருவிழா போன்று கொண்டாடினார்கள்.இப்படி அண்ணாமலைக்கு இந்த நடைப்பயணத்தின் மூலம் கிடைத்த வரவேற்புகள் அனைத்தும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் பின்னடைவாக பார்க்கப்பட்டது அதோடு லோக்சபா தேர்தலுக்கான தீவிர நடவடிக்கைகளையும் தமிழக பாஜக மேற்கொண்டு வருகிற நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்றுள்ள பாஜகவின் வாக்கு வங்கி தற்போது ரெட்டை இலக்கத்தில் தான் இருக்கும் என்றும் பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து பாஜக பக்கம் தமிழகத்தில் உள்ள பழமையான கட்சிகளும் சில முக்கிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளது.
முதலில் காங்கிரஸ் மற்றும் திமுக அதிமுக என பிற கட்சிகளை சேர்ந்த பல தொண்டர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அதற்குப் பிறகு தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி, அமமுக போன்ற கட்சிகள் இணைந்துள்ளது இதனை அடுத்து நேற்று கூட பாமக பாஜகவின் கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கிட்டையும் பெற்றுக் கொண்டது. அதுமட்டுமின்றி முன்பில்லாததை விட தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் பயணங்களை மேற்கொண்டு பாஜகவின் பொது கூட்டங்களில் கலந்து கொண்டு திரளான மக்கள் முன்னிலையில் பேசி வருகிறார் அவரை பார்ப்பதற்கு மக்கள் கூடும் கூட்டமும் பிரதமருக்கு கொடுத்த வரவேற்பையும் கோவையில் நடந்து முடிந்த ரோட் ஷோவே சான்று!. அதோடு சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பாமக ஓபிஎஸ் அணி என திமுக அதிமுக நிலைத்திராத பல கட்சி தலைவர்களையும் பிரதமர் மேடையில் ஒன்றிணைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்ததும் அரசியல் வட்டாரங்களில் பெருமிதமாக பேசப்படுகிறது. இதனால் ஆடிப் போயிருக்கும் திமுக அதிரடி நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று காணொளி மூலம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இருப்பினும் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.