24 special

குரூப் -4 தேர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது... திமுக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள இளைஞர்கள்

mkstalin , tnpsc group 4
mkstalin , tnpsc group 4

திமுக அரசின் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குளறுபடிகளால் குரூப் 4 முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் இளைஞர்கள் மத்தியில் திமுக அரசின் மீது கோபம் அதிகரித்துள்ளது. 


திமுக அரசு அமைந்ததிலிருந்து நிர்வாகம் சரியாக இல்லை, நிர்வாக கோளாறுகள் நிறைய நடந்து வருகின்றன, முதல்வர் ஸ்டாலின் எதையும் கவனிப்பதில்லை, செல்பி எடுப்பதற்கும், போட்டோ சூட் நடத்துவதற்கும், யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதற்குமே நேரத்தை செலவிடுகிறார் எனவும் அவர் அரசாங்க பணிகளை சரிவர கவனிப்பதில்லை என்ற தோணியில் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வு விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த 24.07.2022 அன்று நடந்தது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18,36,535 பேர் தேர்வை எழுதினர். இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தகவல் தரப்பட்டது. இதனால் OMR விடைத்தாளின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக இந்த முறை உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

இதனை திருத்தும் பணிகளை அரசு பணியாளர் தேர்வாணையம் 7 மாதமாக செய்து வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வரலாற்றில் இதுவரை இதுபோன்று நடந்ததில்லை எனவும் கூறப்படுகிறது. அதற்கு அரசு பணியாளர் நிர்வாகத்தினர் நிறைய விளக்கத்தை அளித்து வருகின்றனர். விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுவதாக என அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கூறிவருகின்றனர். 

இது மட்டுமல்லாமல் தேர்வர்கள் செய்யும் 16 விதமான பிழைகளையும் சரிபார்க்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நீடித்து வருகிறது என்றும் கூறினார். ஆனால் தேர்வை எழுதிய இளைஞர்கள் இதனை ஏற்பதாக இல்லை, காரணம் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இப்படி இத்தனை மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளிவராத காரணத்தினால் குரூப்-4 தேர்வுக்காக கிட்டத்தட்ட 8 முதல் 10 மாத காலம் நேரம் செலவழித்து படித்து வந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த அதிருப்தி திமுக அரசின் மீது கோபமாக மாறி உள்ளது, இப்படி எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் வகையில் நாங்கள் ஒரு தேர்வு முடிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களால் வேறு தேர்விற்கும் இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக தயார் செய்ய முடியவில்லை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அதனை பற்றி கண்டுகொள்ளாமல் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார். 

இதுதான் மக்களுக்கான அரசா? இதுதான் இளைஞர்களுக்கு கிடைக்கும் நீதியா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர், ஆனால் அரசு பணிக்காக நாங்கள் தயாராகி எழுதிய தேர்வின் முடிவையே அவர்களால் கொடுக்க முடியவில்லை! இது தான் திராவிட மாடல் அரசா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.