Tamilnadu

தமிழகம் முழுவதும் என் மீது வழக்குகள் போடட்டும் சந்திக்க தயார் H ராஜா இருவேறு பரபரப்பு பேட்டி!

h raja
h raja

பாஜக மூத்த தலைவர் H ராஜா விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு H ராஜா பதில் அளித்தார் குறிப்பாக ஜெய் பீம் திரைப்படம் குறித்த கேள்விக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும் H ராஜா அளித்த பதிலை பார்க்கலாம்.


ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா, அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியும் என கூறினார்.

ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும், பட்டியல் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார். ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்குகிற சிங்க் சென்னையாக உள்ளது என விமர்சித்தார்.   

மேலும் சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு ரூ. 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும் என்றார்.

கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது என்றும் கோவில் மீது அத்துமீறி செயல்பட்டாள் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். 

இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும்  எத்தனை பொய் வழக்குகள் போடட்டும். அதை சந்திக்க தயார் என கூறினார். கோயம்புத்தூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லை தற்கொலை குறித்த கேள்விக்கு, தப்பு செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் தவறு செய்தவர்கள் யாரக இருந்தாலும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.