நேற்று சாணக்கியா இணைய ஊடகத்தின் சார்பில் அந்நிறுவனம் நடத்திய கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தனியார் இடம் ஒன்றில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத், பத்திரிகை துறையை சார்ந்தவர்கள், பரிசுகளை வென்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை பிரதமரின் பல்வேறு மக்கள் நல. திட்டங்கள், அதில் தமிழக மக்கள் அடைந்த பலன் என்ன என பல கருத்துக்களை விவரமாக எடுத்து விவரித்தார்.
அப்போது இடையே பேசியவர், திமுக. எம் எல் ஏ உதயநிதி துபாய் சென்று மேட்ச் பார்த்த விஷயத்தை ஒப்பிட்டு பேசினார் அண்ணாமலை பேசியதாவது :- தமிழ்நாட்டிலிருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்.ஆனால், தமிழ்நாடு தாண்டி துபாய் போய் சி.எஸ்.கே சட்டையை போட்டு முதல்வர் மகன் (சேப்பாக்கம் சே ) மேட்ச் பார்த்து கை தட்ட ஒரே காரணம், இந்திய பிரதமர் மீது மரியாதை காரணமாக துபாய் அரசு இந்தியர்களுக்கு hard quarantine போடாததே காரணம். பிரதமரின் குரல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டார்.
அண்ணாமலை இவ்வாறு உதயநிதி மேட்ச் பார்த்த விவகாரத்தை கிண்டல் அடித்து பேசியதும் கூடவே பிரதமர் மோடியின் வெளிநாட்டு உறவுகள் குறித்து பட்டியல் போட்டதும் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது. அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.