தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மீது திமுகவின் அதிகார பூர்வ நாளிதழ் கடும் விமர்சனம் வைத்தது மேலும் கொக்கென்று நினைத்தாயோ என எச்சரிக்கை எல்லாம் விடுத்தது திமுக அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வில் தமிழகம் விலக்கு கேட்கிறது ஆனால் மத்தியஅரசு கண்டு கொள்வது இல்லை என எச்சரிக்கை எல்லாம் விடுத்தார் ராகுல் காந்தி.
இந்த சூழலில் தமிழக சட்டமன்றத்தில் திமுக அரசு கொண்டுவந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மீண்டும் தமிழக சட்டசபை தலைவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார், இது ஆளும் திமுகவை கடும் சிக்கலில் கொண்டுவந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.
தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்.13-ம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திவந்தனர். எனினும், மசோதா தொடர்பாக எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியாகவில்லை. இன்று ஆளுநர் மாளிகை தரப்பில் நீட் மசோதா தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திரும்ப அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. எனவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதியே தமிழக அரசிற்கு விளக்கப்பப்பட்டுள்ளது" என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் நீட் தேர்வு மூலம் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள சூழலில் நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழகத்தில் பல அரசு பள்ளி மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது அதே நேரத்தில் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக பேசிவந்த திமுகவிற்கும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கும் ஆளுநர் மூலம் பதிலடி கொடுத்துள்ளது மத்திய அரசு.
More Watch Videos