Politics

2001 ம் ஆண்டை போல் மீண்டும் 2021- ல் வெற்றி பெறுவாரா H ராஜா!! வெளியான அதிரடி சர்வே!!

2001 ம் ஆண்டை போல் மீண்டும் 2021- ல் வெற்றி பெறுவாரா H ராஜா!! வெளியான அதிரடி சர்வே!!
2001 ம் ஆண்டை போல் மீண்டும் 2021- ல் வெற்றி பெறுவாரா H ராஜா!! வெளியான அதிரடி சர்வே!!

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியை செட்டிநாடு என்றும், கல்வி நகரம் என்றும், சிறப்புற்று அழைக்கிறார்கள். இங்கு கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. கல்விக்காகவும், இருப்பிட வசதிக்காகவும், இயற்கையின் பெரும்கொடை சம்பை ஊற்றின் குடிநீருக்காகவும் இங்கு ஏராளமானோர் குடியேறி உள்ளனர்.


உலகில் மொழிக்கென ஒரு கோவில் முதலில் உருவாக்கப்பட்டது என்றால் அது காரைக்குடியில்தான். இங்கு உள்ள கம்பன் மணிமண்டபத்தில் தமிழ் தாய்க்கென தனிக்கோவில் உள்ளது. திருக்குறள் கழகம், அண்ணா தமிழ் கழகம், கம்பன் கழகம், பாரதிதாசன் பேரவை உள்பட பல்வேறு தமிழ் சார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் காரைக்குடிக்கு சிறப்பிடம் உண்டு.

காரைக்குடி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 15 ஆயிரத்து 351. ஆண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 905. பெண்கள் 1 லட்சத்து 60 ஆயிரத்து 399. மூன்றாம் பாலினத்தவர் 47.

காரைக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை காரைக்குடி நகராட்சி, மற்றும் தேவகோட்டை நகராட்சி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. மேலும் தேவகோட்டை ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியம், சாக்கோட்டை ஒன்றியத்தில் பெரும்பகுதி, கல்லல் ஒன்றியத்தில் ஒரு பகுதி, புதுவயல் கண்டனூர் பேரூராட்சி பகுதிகள் உள்ளன. 

இத்தொகுதியில் கடந்த 1952 முதல் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க தலா 4 முறையும், தி.மு.க. 3  முறையும் பாஜக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முக்குலத்தோர், சிறுபான்மையினர், தலித், முத்தரையர், வல்லம்பர், பிள்ளைமார் இதர சாதியினர் என அனைவரும் கணிசமாக உள்ள தொகுதி காரைக்குடி சட்டமன்ற தொகுதியாகும்.

இதுவரை காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் 

1952- சொக்கலிங்கம் செட்டியார் (காங்கிரஸ்)

1957- ராஜா சர் முத்தையா செட்டியார் (காங்கிரஸ்)

1962- கணேசன் (சுதந்திரா கட்சி)

1967- வக்கீல் மெய்யப்ப செட்டியார் (சுதந்திரா கட்சி)

1971- சித.சிதம்பரம் (தி.மு-.க.)

1977- காளியப்பன் (அ.தி.மு.-க.)

1980- சித.சிதம்பரம் (தி.மு-.க.)

1984- துரைராஜ் (அ.தி.மு.க.)

1989- ராம.நாராயணன் (தி.மு.க.)

1991- கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க.)

1996- சுந்தரம் (த.மா.கா.)

2001- எச்.ராஜா (பா.ஜனதா)

2006- சுந்தரம் (காங்கிரஸ்)

2011- சித.பழனிச்சாமி (அ.தி.மு.க.)

2016- கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்)

தற்போதைய கள நிலவரம் : திமுக அதிமுக நேரடியாக இந்த தொகுதியில் போட்டியிடவில்லை மாறாக பாஜக, காங்கிரஸ், அமமுக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது, பாஜகவை பொருத்தமட்டில் H ராஜா போட்டியிடுகிறார், காங்கிரஸ் சார்பில் மாங்குடி என்பவர் போட்டியிடுகிறார், அமமுக சார்பில் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார்.

கள நிலவரத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக திமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை பெறுவதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வந்தாலும், தற்போது பாஜகவின் தீவிர பரப்புரையால் பாஜக தொகுதியில் முன்னேறி வருகிறது, அமமுக அதிமுக வாக்குகளை பிரிக்கும் என கருதப்பட்ட நிலையில், அக்கட்சி காங்கிரஸ் வாக்குகளையும் பிரிப்பது தெளிவாக களத்தில் அறியமுடிகிறது.

பா சிதம்பரத்தின் ஆதரவாளர் மாங்குடிக்கு சீட் கொடுக்கப்பட்டது, தொகுதியில் உள்ள மற்றொரு கோஷ்டியினருக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, அவர்கள் முழுமையாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் உள்ளடி வேலை நடைபெறுகின்றன.

பாஜக வேட்பாளர் H. ராஜாவை பொறுத்தமட்டில் தேவகோட்டை, காரைக்குடி நகர் மற்றும் கிராம பகுதிகளை குறிவைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது, தொகுதியில் அனைத்து சமுதாய மக்களையும் சந்தித்து தான் வெற்றி பெற்றால் உங்களுக்கு என்ன செய்வேன் என தனது வாக்குறுதியை அவர்கள் இடத்தில் அமர்ந்து தெளிவாக விளக்கி வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு மற்றும் தமிழக அரசு  ஆகிய இரண்டு அரசுகளும் தமிழக மக்களுக்கு செய்த சாதனை என்ன வென்று தேர்தல் பரப்புரையில் தெளிவாக எடுத்து கூறுகிறார் இதன் மூலம் தொகுதியில் பாஜக கடந்த இரண்டு நாட்களில் முழுமையாக முன்னேறி வருகிறது. களத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாஜக வேட்பாளர் H ராஜாவிற்கு ஆதரவாக முழு வீச்சில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2001-ம் ஆண்டு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவர் H ராஜா, தற்போது 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று H ராஜா இரண்டாவது முறையாக  இதே தொகுதியில் இருந்து வெற்றி பெறுவார் என கள நிலவரங்கள் மாறி வருகின்றன.