பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், தொடக்கம் முதலே பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு திமுகவினர் திட்டமிட்டு உருவாக்கிவரும் சூழலில் அவற்றை ஒவ்வொன்றாக வீழ்த்தி வெற்றி கண்டு வருகிறார்.
கடந்த முறை இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் அண்ணாமலை, பள்ளப்பட்டி பகுதிக்குள் நுழைந்து பிரச்சாரம் செய்ய தடை விதித்து, நோட்டீஸ் அனுப்பினர், ஆனால் நான் இந்திய குடிமகன் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்ய எனக்கு முழு உரிமை உள்ளது, நான் பள்ளப்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்வேன் என குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து தேர்தல் களம் அதிரடியாக மாற தொடங்கியது, ஜமாத் நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் வாங்கியது, அதை தொடர்ந்து அண்ணாமலை சொன்னது போல் பள்ளப்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார், இந்நிலையில் அரவகுறிச்சி தொகுதியில் அண்ணாமலைக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண்கள் களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் முதல் முறையாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெரும் சூழல் உண்டாகி இருக்கிறது, இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக அண்ணாமலை மீது வழக்கு கர்நாடக மாநிலத்தில் வழக்கு இருக்கிறது, அதனை சமாளிக்க பாஜகவில் அவர் இணைந்து இருப்பதாக திமுகவினர் குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, தனது முழு விளக்கத்தை கொடுத்தார், எனக்கு ஆதரவாக இருக்கும் எனது கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள் எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது, கர்நாடக முகம், இறங்கி அடித்தால் செந்தில்பாலாஜி பல்லு எல்லாம் உடைந்துவிடும், நான் அரசியலுக்கு சேவை செய்ய வந்துள்ளத்தால் அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் பேச்சு களத்தில் எதிரொலித்து வருகிறது, ஏழ்மையான நடுத்தர குடும்பத்தில், ஆடு மேய்த்து வருமானம் பார்த்த குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர், மிக பெரிய அரசு பணியை துறந்து அரசியலுக்கு வந்தவரை வெற்றி பெற வைக்கவேண்டும் என பொது மக்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலைகான செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அவருக்கானா வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருவது தொகுதியில் கள நிலவரமாக எதிரொலித்து வருகிறது.