லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கோவையில் கொடுத்த செய்தியாளர் சந்திப்பு தற்போது பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற படத்திற்கு படம் சமூக நீதி என கொடி பிடிப்பவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது அதற்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஒரு வரி பதில்தான் காரணமாக அமைந்து இருக்கிறது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். சிறப்புரை வழங்கிய லோகேஷ் கனகராஜ் மாணவர்களுடனும் கலந்துரையாடினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கூறியதாவது.
ரஜினி உடனான படத்தில் இணைவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜயுடன் மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி தான். சமூக நீதி சார்ந்த படங்கள் எடுக்காததற்கு காரணம் என்ன என கேட்டபோது "அதற்கான அறிவு இல்லை" என பதில். லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த முயற்சிப்போம்.. எப்படியாவது விஜய கோவைக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன். லியோ திரைப்படத்தில் அரசியல் இருக்காது. ஆடியோ லான்ச் செப்டம்பரில் நடைபெறும். எனக்கு ஆயிரம் கோடி முக்கியம் அல்ல.. தனிப்பட்ட நபர் கொடுக்கும் 150 ரூபாய் தான் முக்கியம் என செய்தியாளார்கள் எழுப்பிய கேள்விக்கு சட்டென பதில் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.
லியோ திரைப்படத்தில் அரசியல் இருக்காது என கூறியதும் மேலும் ஏன் சமூக நீதி சார்ந்த படங்கள் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு எனக்கு அரசியல் அறிவு இல்லை அரைகுறை அறிவுடன் பதில் சொன்னால் அது மிக பெரிய பிரச்சனையில் முடிந்து விடும் என ஒரே வரியில் முடித்து கொண்டார் லோகேஷ்.
இதுவே பா. ரஞ்சிடமோ அல்லது மாரி செல்வராஜ் போன்றோரிடம் மைக்கை கொடுத்தால் 30 நிமிடத்திற்கு குறையாமல் நாங்கள் பாதிக்கபட்டோம் படத்தில் முழுக்க முழுக்க சமூக நீதி இருக்கு என தொடங்கி ராஜ ராஜசோழன் காலம் வரை பேசி இருப்பார்கள் படத்தை படமா பாருங்கள் நானும் அப்படி தான் எடுத்து இருக்கிறேன் என சொல்லாமல் ஒரே வரியில் முடித்து கொண்டார் லோகேஷ்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் எடுத்த மாநகரம் திரைப்படம் வெற்றி பெற்ற போது அப்போதே அதனை பா. ரஞ்சித் விமர்சனம் செய்து இருந்தார் அதில் சென்னையில் பேசப்படும் ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம் படத்தில் காட்சி வைத்து இருக்கிறார் இயக்குனர் ஏன், இதற்கும் முன் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஒரு ஊரிலும் கெட்ட வார்த்தையை நீங்கள் கேட்டதே இல்லையா. இந்த வார்த்தை கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அது சைக்கலாஜிக்கல் பிரச்சனை.
ஏனென்றால், உன் சொல்பேச்சை கேட்ட அடிமைப்பட்டு கிடந்த ஒருவன், சென்னையில் உன்னை அசால்டாக டீல் செய்வது, உனக்கு கோபத்தை தூண்டுகிறது " என்று கூறியுள்ளார். இப்படி என்னடா கிடைக்கும் எங்கடா பதில் சொல்லலாம் என மைக் முன் நிற்கும் பாரஞ்சித்திற்கு சிம்பளாக நான் எடுத்து இருப்பது பொழுது போக்கு படம் அரசியல் இல்லை அரசியல் பேச எனக்கு அறிவும் இல்லை விஜய் அரசியல் பற்றி கேட்டதற்கும் விஜய் நல்லவர் என ஒரே வரியில் முடித்து கொண்டு தனது பணி என்ன என தெளிவாக உணர்த்தி இருக்கிறார் லோகேஷ்கனகராஜ்.
இனியாவது பா. ரஞ்சித் போன்றோர் மக்களுக்கு பிடித்த திரைப்படம் எடுப்பார்களா என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.