முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியின் மகனுமான துரை தயாநிதி அழகிரி கிளவுட் நயன் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தவர். இவர் மங்காத்தா மற்றும் தமிழ் படம் ஆகிய படங்களை தயாரித்து உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இருந்த பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் மூளை ரத்த நாளத்தில் இருந்த பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் மருத்துவ வட்டாரங்களில் கூறப்பட்டது. இருப்பினும் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் போதுமானதாக இல்லாததால் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணன் மகன் தயாநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது மருத்துவமனைகளுக்கு சென்று நலம் விசாரித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது, இதனை அடுத்து கடந்த தினங்களிலும் மீண்டும் அவர் துரை தயாநிதி சந்தித்து வந்துள்ளார். முன்னதாக திரை துறையில் தயாரிப்பாளராக வளம் வந்து கொண்டிருந்த துரை தயாநிதி எப்படி திடீரென்று உடல்நல குறைவிற்கு உட்பட்டார், மயக்க நிலையை எவ்வாறு அடைந்தார் என்பது குறித்த பல கேள்விகளும் சந்தேகங்களும் சமூக வலைதளம் முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது அதே சமயத்தில் அழகிரி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வரும் நிலையிலும் முதல்வர் ஏன் துரை தயாநிதியை சந்தித்து வந்தார் என்று பார்த்தால் துரை தயாநிதி முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்துடன் நன்கு பேசி பழகி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் துரை தயாநிதி உடல்நில குறைவிற்கு என்ன காரணம் என்பதற்கு மட்டும் விடையே கிடைக்காமல் தேடுபொருளாகவே இருந்தது.
ஆனால் அதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே பிரபல அரசில் விமர்சகராக இருக்கிற சவுக்கு சங்கர் பகிரங்க தகவலை தெரிவித்திருந்தார். அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது அதிலும் குறிப்பாக டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கும்பலுக்கு திமுகவின் ஒரு நிர்வாகி தான் தலைவராக இருந்துள்ளார் என்ற செய்தி வெளியானதிலிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் டெல்லி போலீஸ் மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குற்றவாளியாக இருக்கின்ற ஜாபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாபருடன் முதல்வரும் அவரது மகனும் அதிக நெருக்கம் காட்டியுள்ளனர் என்பது இன்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் ஒன்று! அந்த வகையில் போதைப் பொருளின் புழக்கத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் இடையே ஜாபர் அதிகம் இருக்கும் காட்டி வந்துள்ளார் என்பதும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு என எடுத்துரைத்த சவுக்கு சங்கர் திமுகவிற்கு போதைப் பொருள் கடத்தலில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது சொத்து சேர்ப்பதற்காக இந்த வேலை எல்லாம் பார்க்கிறார்கள் ஆனால் இவர்கள் இந்த விவகாரத்தில் தன் சொந்த அண்ணன் பையனையே இழக்கப் போகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட துரையை சந்தித்து நான் பேசியிருந்தேன் நிச்சயமாக துரை தயாநிதி மயக்கம் அடைவதற்கு முன்பு அதிகளவிலான போதைப் பொருளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அந்த பழக்கத்தினால் அவர் தற்போது இந்த ஒரு நிலையை அடைந்திருப்பார் என்று பரபரப்பான தகவலை கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார் இருப்பினும் அவர் கூறியதுபடியே தயாநிதியும் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகிறார் என்பது அரசியல் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.