24 special

மாவீரர் வாஞ்சிநாதன் குற்றவாளியாம்! முரசொலி பத்திரிக்கைக்கு டஃப்கொடுத்த குரூப்1 தேர்வு கேள்விகள்!

group1 exam
group1 exam

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர் முதல் விஏஓ வரை பல துறைகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 90 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை 13 ஆம் தேதி சனிக்கிழமை நடைப்பெற்றது.டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வு  2.38 லட்சம் பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 797 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்த நிலையில் குரூப் 1 தேர்விற்கான வினாத்தாள் தற்போது பெரும் விவாத பொருளாகி உள்ளது. மேலும் தென்தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் நிலையில் இல்லை மாறாக வரலாற்றை மாற்றி மாணவர்களிடையே வன்மத்தை உண்டாக்கும் வகையில் கேட்கப்பட்டுள்ளது. 


மேலும் அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் திராவிட சித்தாந்தத்தை திணிக்கும் வினாத்தாளாக அமைந்துள்ளது. மேலும் நமது நாட்டின் சுதந்திரத்தக்கு தமிழகத்தில் பல சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுபட்டுள்ளார்கள்.தனது சொத்துக்களை விற்று செக்கிழுத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை முதல் பாரதியார் வாஞ்சிநாதன் என அடுக்கி கொண்டே செல்லலாம்.  ரத்தம் சிந்தி பல இன்னல்களை சந்தித்து இன்னுயிரை கொடுத்து சுதந்திரம் வாங்கி கொடுத்து சென்றுள்ளனர். அவர்களை எல்லாம் அவமானப்படுத்தும் விதமாக தமிழக அரசு சர்ச்சையான முறையில் வினாத்தாளில் கேள்வி கேட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கேள்வி எண் 111 ல், ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார் ? என கேள்வி கேட்கப்பட்டு a)சங்கர கிருஷ்ணன், b)நீலகண்ட பிரம்மசாரி,c)மாடசாமி, d)வாஞ்சிநாதன் என நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் விடையாக ஆப்ஷன் 4 d)வாஞ்சிநாதன் என கூறப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரான ஆஷ்ஷை சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று தனது இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணம் செய்தார். அவரை எப்படி குற்றவாளி என்று நீங்கள் அழைக்கலாம். சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தி ஆங்கிலேயர்களை கவுரவபடுத்துவதுதான் திராவிட மாடலா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுமட்டுமல்லாமல் சுதந்திரதினம் கருப்புதினம் என கூறியவறும் கடவுள் மறுப்பாளரானமான  ஈ.வே.ராமசாமி நாயக்கரை குறிப்பிடும் வகையில் பற்றி 4 ,5 கேள்விகள் கேட்ப்பட்டுள்ளது. மேலும்  அதில் கேள்வி எண் 68 ல் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார் ? என கேட்கப்பட்டுள்ளது. ஆனால் நமது ஏவுகணை நாயகன் மேதகு அப்துல் கலாம் அவர்களை பற்றி ஒரு கேள்வி கூட இல்லை. அப்துல் கலாம் அவர்களை விட ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார் என்று தெரியவில்லை.  என நெட்டிசன்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பிவருகிறார்கள் 

இதுமட்டும் அல்லாமல் திராவிட கட்சியை சேர்ந்த சுப.வீரபாண்டியன் குறித்து கூட கேள்வி வந்துள்ளது தான் கொடுமையிலும் கொடுமை.அனைத்து மத துறவிகளை விமர்சிக்கும் வகையிலும்.துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

அகண்ட பாரதத்தை பிரிப்பதற்காக 1933 ல் பாகிஸ்தானுக்காக கோரிக்கை விடுத்த முதல் முஸ்லீம் தலைவர் யார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மேலும் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, தேச பிரிவினை என மக்கள் பலரும் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். அதனை மாற்றி காங்கிரஸ் கட்சியை நல்ல விதமாக திணித்துள்ளனர்.

மொத்தத்தில் குரூப் 1 வினாத்தாள் துறவிகளையும், விடுதலை போராட்ட வீரர்களையும் இழிவுபடுத்தி, குறிப்பிட்ட சமுதாயத்தையும்  காங்கிரஸையும் பெருமை படுத்தி, திராவிட சித்தாந்தத்தை உட்புகுத்தும் அறிவாலய முரசொலி பத்திரிக்கை போல் தான் உள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.