2011 இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் இருந்தார். அப்பொழுது இவர் பண மோசடியில் ஈடுபட்டதாக அப்போதையே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலினே குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி மீது முன் வைத்திருந்தார். ஆனால் 2016 இருந்து தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றமே ஏற்பட்டது. அதாவது 2016ல் மீண்டும் அதிமுக ஆட்சி பிடித்தது. ஆனால் அந்த வருடமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்கப்பட்டார். ஆனால் சசிகலாவின் வேண்டுதலுக்கு இணங்கி பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைச் செல்லும் நிலை ஏற்பட்டதால் பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார் சசிகலா.
ஆனால் இதில் கட்சியில் உள்ள சிலருக்கு பெரும் வாக்குவாதங்கள் ஏற்பட டிடிவி தினகரன் அதிமுகவை விட்டு வெளியேற அவருடனே செந்தில் பாலாஜியும் இணைந்திருந்தார்.ஆனால் செந்தில் பாலாஜி திமுகவிற்கு தாவியத்தை அடுத்து முதல்வர் மு க ஸ்டாலினிற்கு மிகவும் நெருக்கமானவராகவும் நம்பிக்கை கூறியவராகவும் மாறினார். மேலும் இவரது கட்டுப்பாட்டில் இரு பெரும் பொறுப்புகள் இருந்தது. ஆனால் இவரை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வர மேலும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது செந்தில் பாலாஜி செய்த மோசடியும் புகாராக வெளிவந்ததை அடுத்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு பிறகு செந்தில் பாலாஜியை கைதும் செய்தது அமலாக்கத்துறை.
இதனை அடுத்து செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து, பிறகு சிறையில் அடைக்கப்பட்டு படாதபாடுகளை பட்டார்! அதற்குப் பிறகு தனது ஜாமீனுக்காக செந்தில் பாலாஜியும் பல நீதிமன்றங்களை ஏறி இறங்கி விட்டார் இருப்பினும் இதுவரை செந்தில் பாலாஜிக்கான ஜாமீன் வழக்கு தள்ளுபடி ஆகிக்கொண்டே வருகிறது. இதற்கிடையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் மேற்கொண்ட விசாரணையில் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தனது சகோதரர்களுக்கு தான் தெரியும் என்று கூறியதால் அமலாக்கத்துறை அசோக் குமாரின் வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இதனை அடுத்து அசோக் குமார் நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் இதுவரை தலைமறைவாக உள்ளார். இது செந்தில் பாலாஜியின் வழக்கில் மேலும் ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அசோக் குமார் இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி வருவதாகவும் அமலாக்கத்துறை இந்த தகவலை பலமுறை காவல்துறையிடம் தெரிவித்தும் காவல்துறை அசோக்குமாரை கைது செய்வதை தாமதப்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகிர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது அசோக்குமார் கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இரவு நேரங்களில் வந்து செல்வதாகவும், அவரைப் பிடித்து கொடுப்பதற்கு காவல்துறை தயக்கம் காட்டுவதாகவும் இந்த தகவல் குறித்து அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் செந்தில் பாலாஜியின் வழக்கை பொறுத்தவரையில் அவர் குற்றம் செய்தவர் என்பதை முதல்வர் ஸ்டாலினே எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது கூறியிருக்கிறார் இதை அடுத்து அமலாக்கத்துறையிடம் தனது சகோதரர் தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இருப்பினும் அசோக் குமாரின் கைதை ஏன் காவல்துறை தாமதப்படுத்துகிறது ஒரு வேலை இவை அனைத்திற்கும் பின்னால் திமுக வின் திட்டம் தான் இருக்கிறதா என்ற வகையில் ஒரு பேச்சு பரபரப்பாக உலா வருகிறது.