24 special

46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கருவூலம்...!! கருவூலத்திலிருந்த விலைமதிப்பற்ற சொத்துக்கள்..! வியக்கவைக்கும் பூரியின் மர்ம அறை...

puri temple
puri temple

உலக அளவில் ஒரு கோவிலின் தேரோட்டம் பிரசித்து பெற்றது என்றால் அது ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதரின் கோவில் தேரோட்டம் தான்! இந்த தேரோட்டத்தை காண நாட்டின் எந்த மூலையில் இருந்தும் மக்கள் ஒடிசாவை நோக்கி செல்வார்கள் மேலும் உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பூரி ஜெகநாதரின் தேரோட்டத்தை பார்ப்பதற்கு அலைஅலையாக வருவார்கள் என்பது இன்றளவும் நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட இந்த கோவிலில் உள்ள மூலவர் மற்ற ஆலயங்களில் உள்ளது போன்று கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட சிலையில் காட்சி கொடுக்க மாட்டார் அதற்கு மாறாக மரச் சிற்பங்களாலே கிருஷ்ணர் பூரி ஜெகன்நாதராக அருள் பாலிக்கிறார்.


ஜெகன்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ரா தேவியும் மற்றொருபுறம் சகோதரர் பலராமரும் அருள்பாளிக்கிறார்கள். இந்த கோவில் இன்னும் விபரிக்கப்படாத பல அறிவியல், மர்மங்கள் மற்றும் அதிசயங்கள் இன்றளவும் உள்ளது இவற்றிற்கு என்ன அறிவியல் காரணம் இருக்கிறது என வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், பாதிரியார்கள் மற்றும் சாதாரண மக்கள் கூட இன்றளவும் அவற்றை தேடி வருகின்றனர். 

அப்படிப்பட்ட மர்மங்களில் ஒன்றுதான் பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள கருவூல அறை! இந்த கருவூல அறை கிட்டத்தட்ட 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது இவற்றை எந்த அரசு ஆட்சிக்கு வந்தால் திறக்கும் என்று எதிர்ப்பும், அப்படி என்னதான் இந்த கருவூலத்தில் இருக்கிறது என்ற ஒரு தேடலும் ஒடிசா முழுவதுமே பரவி கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கருவூலம் நேற்று திறக்கப்பட்டிருக்கிறது அதில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஒடிசாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் பொழுது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில் பாஜக பெரும்பான்மையான வெற்றியை பெற்றதை அடுத்து அங்கு தனது புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது. முன்னதாக தேர்தலுக்கு முன்பாகவே ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை மேற்கொண்ட பொழுது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூல அறையில் சாவியானது தமிழகத்தில் இருக்கிறது என நவீன் பட்நாயக்கிற்கு சொந்தமானவரான தமிழகத்தைச் சேர்ந்த விகே பாண்டியனை குறித்து பேசியிருந்தார்.  

இதனை அடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 46 ஆண்டுகளாக திறக்கப்படாத இருந்த பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூல அரை நேற்று திறக்கப்பட்டிருக்கிறது. இந்த அரைக்கும் நுழைவதற்கு மாநில அரசால் 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்ட உள்ளது. மேலும் அந்தக் கருவூர அறையில் வெளிப்புற மற்றும் உட்புறம் என இரண்டு கருவூலங்கள் இருப்பதாகவும், அதில் வெளிப்புற கருவூலத்தில் மட்டும் ஜெகநாதரின் சுனமுகுந்தம் மற்றும் தலா 1.4 கிலோகிராம் எடையுள்ள மூன்று தங்க நகைகள் இருப்பதாகவும், உட்புற கருவூலத்தில் 74 தங்க ஆபரணங்கள் இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றும் சுமார் 1.17 கிலோகிராமிற்கு மேல் எடை கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவற்றைத் தவிர தங்கம், வைரம், பவளம், முத்து போன்றவற்றால் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் 140க்கும் மேற்பட்ட வெள்ளி நகைகளும் கருவூலத்தில் இருப்பதாகவும், இவை அனைத்தையும் ஒடிசா மன்னர் அனங்கபீமா தேவ் ஜெகநாதருக்கு நகைகள் தயாரிப்பதற்காக 2.5 லட்சம் தங்க நாணயங்கள் மதிப்பிலான தங்கத்தை நன்கொடையாக அவர் அளித்ததன் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. 

இதுவரை ஒடிசா பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள சொத்து மதிப்பு மற்றும் கருவூலத்தில் உள்ள நகை குறித்த தகவல்கள் வெளியாகாமல் பெரும் புதிராகவே இருந்து வந்ததை பாஜக அரசு முறியடித்து, கருவூலத்தில் உள்ள மொத்த மதிப்பையும் மக்கள் முன்னிலையில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.மேலும் அந்த மர்ம அறையை பூரி ஜெகன்னாநாதரின் சக்தி பாதுகாக்கிறது எனவும் ஒடிசா மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது...