சமீபத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயணத்தினை அருந்திய 165 பேரில் உடல்நிலை மோசமடைந்ததால் கள்ளக்குறிச்சி, ஜிப்மர், சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் இரண்டு வருவது குறிக்க செய்திகள் அவ்வபோது வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது 45க்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் 118 பேர் தற்பொழுது தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், வெறும் மூன்றே நபர்கள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது இதற்கு தல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு அண்ணாமலை அவர்கள் தனது இணையதள பக்கத்தில் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சினிமா ஹீரோக்களுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏனென்றால் இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியில் இருந்த பொழுது திமுகவிற்கு ஆதரவாக குடை பிடிக்கும் படியும், அதிமுகவினை எதிர்க்கும் வகையில் பல போராட்டங்களையும் அப்போது இருந்த ஆளும் கட்சியினை எதிர்த்து நடிகர் கமல், சூர்யா, கார்த்தி, விஜய், சத்யராஜ், ஜிவி பிரகாஷ் மற்றும் சமுத்திரக்கனி போன்ற பலரும் கேள்விகளை கேட்டு வந்தனர். மேலும் அவர்கள் அனைவருமே தங்களின் திரைப்படங்களில் மூலம் இது போன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் கூட பல கேள்விகளை கேட்டு வந்தனர். இவ்வாறு தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்த நடிகர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியாத அளவிற்கு தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். கடந்து 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பிரச்சினைகளிலும் சரி, தற்பொழுது நிகழ்ந்து வரும் பிரச்சனைகளிலும் சரி இரண்டிலுமே எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் சில நடிகர்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து கள்ளச்சாராயத்தினால் திமுகவின் ஆட்சியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் உண்மையாகவே இவர்கள் ஹீரோவாக இருந்தால் முன்பெல்லாம் கேள்விகளை கேட்டு வந்தது போல தற்பொழுதும் கேள்விகளை கேட்டு இருக்க வேண்டும் அல்லவா?? ஆனால் இந்த ஹீரோக்கள் தற்போது வரை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது விஜய் நேரடியாக சென்று பார்த்து வந்தார். அதன் பிறகு ஜி வி பிரகாஷ் இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்குப் பிறகு கமலஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி போன்ற யாருமே இதற்கு எந்த ஊரு கண்டனத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். படத்தில் மட்டும் தான் ஹீரோக்கள் என்று கிடையாது நாங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்கள் தான் என்று கூறி வந்த சூர்யா கார்த்தி கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் தற்போது தாங்கள் சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள்!!
மற்றபடி நிஜ வாழ்க்கையில் நாங்கள் ஹீரோக்களே கிடையாது என்று நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சூர்யாவிற்கு எதிராக நிறைய கண்டனங்கள் இருந்து வந்த நிலையில் நடிகர் சூர்யா திமுக அரசிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் நிலவரம் குறித்தும், திமுகவிற்கு எதிராக மதுவிலக்கு கொள்கையை பற்றியும் பதிவு ஒன்றினை செய்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். தற்பொழுது இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழகத்தில் மக்கள் இவர்கள் படம் வரட்டும் என கொதித்துப்போய் உள்ளதாகவும் சில தகவல்கள் கசிகின்றன...