24 special

50 பேரை காவு வாங்கிய கண்ணுகுட்டி! ஒரு சொட்டு சாராயம் கூட குடித்தது இல்லையாம்! அதிர்ச்சி வாக்குமூலம்

KALLAKURICHI, KANNUKUTTY
KALLAKURICHI, KANNUKUTTY

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு முன், 2023ல், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் பலியாகினர். அதே ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து, 8 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில், 2012 - 2019 வரை, கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் கூட பலியாகவில்லை என, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், 2020 - 2024 ஆண்டு வரை, கள்ளச்சாராயத்திற்கு, 114 பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கிறது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாம் நாளான நேற்று, 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 133 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகதை உலுக்கி உள்ளது உடனே தமிழக அரசு கண்விழித்து கள்ளசாராய வியாபாரி கண்ணுகுட்டி, மற்றும் அவருடைய சகோதரர் தாமோதரன் மனைவி விஜயா உட்பட  10 பேரை காவல்துறை  கைது செய்துள்ளனர். 


கள்ளக்குறிச்சி அருகில் இருக்கக்கூடிய கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கள்ளசாராய வியாபாரி  கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ். கருணாபுரம் பகுதியில் கண்ணுகுட்டி பல ஆண்டுகளாவே கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய வீடு இருக்கக்கூடிய பகுதியை சாராயக்கடை என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். 50 முதல் 60 ரூபாய் வரை விற்கக் கூடிய இந்த கள்ளச்சாராயம் பாக்கெட்டுகளை முதலில் கருணாபுரம் ஆற்றங்கரை ஓரம் மறைவாக விற்பனை செய்து வந்துள்ளார்.பின்னர் கருணாபுரம் குடியிருப்பு பகுதியிலேயே தன்னுடைய வீட்டு அருகே சிறிய கொட்டகை அமைத்து சாராயக்கடையை போட்டு விற்பனையைத் தொடங்கியிருக்கிறார். நாளடைவில் விற்பனை அதிகரிக்க மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்க கள்ளச்சாராயத்தை ஸ்டாக் வைத்து குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார்.டாஸ்மாக் 10 மணிக்கே மூடிவிடும் நிலையில், இங்கு மட்டும் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கருணாபுரம் கிராமத்தைச் சுற்றி இருக்கக்கூடிய பலரும் இங்கு இருந்து தான் கள்ளச்சாரத்தை வாங்கி செல்வதாக கூறுகின்றனர்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டோரமாகத் தான் இந்த கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. காவல்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு சில மாதங்கள் விற்பனையை நிறுத்தி வைத்திருந்தார் கண்ணுக்குட்டி. பின்னர் காவல் துறையை சரி செய்து சாராயத்தை அவருடைய சகோதரர் தாமோதரன் மற்றும் மனைவி விஜயா உடன் சேர்ந்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கிராமத்தில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், இறப்பு , திருமண உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கும் மொத்தமாக ஆர்டர் எடுத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார் கண்ணுகுட்டி.கைது செய்யப்பட்டுள்ள கண்ணு குட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது தன்னுடைய தம்பி தாமோதரன் மூலம் போலீசார் நடமாட்டத்தை வெளியில் இருந்து நோட்டமிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்

கள்ளச்சாராயம் விற்பனைக்கு மட்டும் கண்ணு குட்டி மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கண்ணுக்குட்டி மட்டுமல்லாமல் கள்ளச்சார வியாபாரத்துக்கு அவருக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உறவுகளை இழந்து தவிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.இதனிடையே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜன் இது ஒரு சொட்டு கூட குடித்தது இல்லை என வாக்குமூலம் கொடுதுள்ளார். இதனால் கள்ளச்சாராயத்தை தனது தம்பி தாமோதரனிடம் கொடுத்து குடித்து பாரக்க சொல்வாராம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.கள்ளச்சாராய வியாபாரிகள் மீது ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுத்து முறையாக கண்காணித்து வந்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.