தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை மக்கள் மத்தியில் சந்தித்து வரும் சூழலில் தற்போது அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கடும் எதிர்ப்பை பொது மக்கள் மத்தியில் இருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்து முடித்துவிட்டு, பிறகு வேலாயுதம்பாளையம் நகராட்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அப்போது, தி.மு.க அரசு கடந்த எட்டு மாதங்களில் செய்துள்ள நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக கூறி வந்தார்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் ஒரு சிலர் குடும்ப அட்டைக்கு மாதம் ரூபாய் 1000 தருவதாக கூறியது என்னாயிற்று என்று கேள்வி எழுப்பினர். திடீரென திகைத்து நின்ற உதயநிதி ஸ்டாலின், சட்டென சுதாரித்துக் கொண்ட உதயநிதி கொடுத்துருவோம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது என்றார்.
இது ஒருபுறம் என்றால் அடுத்து பெண் ஒருவர் உங்க பேச்சை கேட்டு நகையை அடகு வச்சோம் என்ன ஆச்சு என கேட்க உதயநிதி விடவிடத்து போயிட்டார் பெண் கேட்டதை கண்டு கொள்ளாமல் பேசினாலும் அவரது முகத்தில் ஈ ஆடவில்லை, உடனே அருகில் இருந்த திமுகவினர் வாயை மூடு என அந்த பெண்ணை மிரட்டினர்.
அந்த பெண்ணை திமுகவினர் அதட்ட பதிலுக்கு சற்று தூரத்தில் இருந்த பொது மக்கள் உரத்த குரலில் ஏய் ஏய் உன் பேச்சை கேட்டு நகையை அடகு வச்சோம் என்ன ஆச்சு என உரத்த குரலில் கேள்வி எழுப்ப திமுகவினர் அமைதியாகினர், தமிழகத்தில் 8 மாத ஆட்சியில் திமுகவிற்கு ஆதரவு இருக்கும் என எதிர்பார்த்தால் தற்போது எதிர்ப்புதான் இருப்பது மக்களின் கேள்விகளில் இருந்தே தெரியவந்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதேனும் பாஜக தலைவர்களை பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அவற்றை பெரிது படுத்தி விவாதம் வரை கொண்டு செல்லும் தமிழக ஊடகங்கள் உதயநிதியை நோக்கி பொதுமக்கள் எழுப்பிய குரல்கள் குறித்து எந்த ஊடக குரலும் பெரிதாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.