Cinema

இனி யாராவது " புர்கா " ஹிஜாப் என பேசுவீர்கள் தமிழக பெண்கள் கருத்து வைரல்..!

Tamil news
Tamil news

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அனைவருக்கும் சீருடை எனும்போது சில இஸ்லாமிய பெண்கள் மட்டும் நாங்கள் புர்கா மட்டுமே அணிவோம் என தெரிவித்த காரணத்தால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.


இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இஸ்லாமிய மாணவிகளுக்கு படிப்பை தாண்டி மதம் முக்கியம் என்றால் எங்களுக்கு எங்கள் மதம் முக்கியம்தான் என இந்து மாணவிகள் காவி நிறத்தில் ஷால் அணிய தொடங்கினர் மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் இந்த விவகாரம் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பல்வேறு நபர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணை நடந்தது விசாரணையின் முடிவில் நீதிபதி அரசின் முடிவிற்கு தடை விதிக்க வேண்டும் என சில மாணவிகள் தொடுத்த வழக்கில் தடை விதிக்க மறுத்து தலைமை நீதிபதி அமர்விற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.

இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த யூடுப் சேனல் ஒன்று கர்நாடக விவகாரத்தில் மக்கள் கருத்தை கேட்டது அதில் பெண்கள் இருவர் தெரிவித்த தகவல் கடும் வைரலாக பரவி வருகிறது, குறிப்பாக பெண் ஒருவர் முதலில் கல்லூரி பள்ளிகளில் நிர்வாகம் உத்தரவிடும் சீருடையில் வருவது நிச்சயம் அவசியம்.

நீங்கள் வெளியில் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் கல்வி என்று வந்துவிட்டால் மாற்று கருத்தே இல்லை என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார் இது தவிர்த்து கல்லூரி மாணவி ஒருவர், சாதி மதம் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில்தான் கல்லூரிக்கே செல்கிறோம் அங்கு மத ரீதியான உடை தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த இருவரின் பேச்சே பெண்களின் எதிர்பார்பாக இருக்கிறது பள்ளிகளில் சீருடை அணியமாட்டோம் என தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ள சூழலில் பெண்கள் இருவர் தெரிவித்த கருத்து கவனத்தை பெற்றுள்ளது. கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.