மதுரை விளாங்குடி பகுதியில் இருக்கும் அத்யபாணா சிபிஎஸ்இ பள்ளியில் நடக்கும் மதரீதியான கொடுமை மாணவர்களுக்கு, மேலே குறிப்பிட்டுள்ள அத்யபாணா சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கக்கூடிய பெருவாரியான மாணவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்கின்ற பட்சத்தில் அவர்கள் விபூதி, சந்தனம், நாமம், திருமண் தரிக்கக்கூடாது ,
கையில் எந்தவித மத அடையாளத்தையும் குறிக்கக்கூடிய கயிறுகளையோ ,காப்பு களையோ கட்டக்கூடாது என்று அந்தப் பள்ளியின் நிர்வாகி திருமதி அருணா விஸ்வேஸ்வரன்,
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரின்சி ஜோசப் இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் அந்த நேரத்தில் எல்லா மாணவ, மாணவிகளுக்கு கட்டளை பிறப்பித்து இருக்கிறார்.
மேலும் பள்ளி நிர்வாகியின் இந்த பேச்சு பெருவாரியான இந்து மதத்தை பின்பற்றும் மாணவ மாணவியர் மத்தியில் கடும் மன உளைச்சலை தந்திருக்கிறது. இன்று இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தனது திருநாமத்தை நெற்றியிலிருந்து அழிக்கவைத்து ,கையில் அணிந்திருந்த காப்புகளை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி எடுத்து அந்த மாணவனை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளியின் இந்த செயலை பள்ளி கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்க அந்த மாணவனின் பெற்றோர் அஞ்சுகின்றனர் .இந்த கொடுமைக்கு நீதி வேண்டும் பள்ளியில் படிக்கும் பெருவாரியான மாணவர்கள் பின்பற்றக்கூடிய மத அடையாளங்களாக நினைத்து விபூதி தரிக்கக்கூடாது, சந்தனம் ,பொட்டு ,பூ அணிந்து வரக்கூடாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் பெருவாரியான பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த இந்த வேளையில் இந்த பதிவை உங்களுக்கு பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம் .
இப்படி அநியாயம் செய்யும் அந்த பள்ளியின் மீது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?பெருவாரியான மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மத மாற்றத்திற்கு பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில் தற்போது மதுரையில் மீண்டும் ஒரு அடக்குமுறை அரங்கேறி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
More Watch Videos