Tamilnadu

எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்படி? "அமைச்சரை" பங்கமாக கலாய்த்த அண்ணாமலை!

annamalai and stallin
annamalai and stallin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தொடர்ந்து சிக்கி கருத்து மோதல் உண்டாகும் தமிழக அமைச்சர்கள் பட்டியலில் இப்போது புதிதாக இணைந்துள்ளார், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்றைய தினம் தமிழணங்கு என்று பெயரில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை ஆகியோர் இருவேறு புகைப்படங்களை பகிர்ந்தனர். இதில் உண்மையான தமிழ் அன்னை யார் என்ற கேள்வி எழுந்தது?


இந்த சூழலில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  அண்ணாமலை வெளியிட்ட தமிழ் அன்னை புகைப்படத்தில் "ஸ" எழுத்து இடம்பெற்றத்தில் இருந்தே உள்நோக்கத்தை அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார், இந்த சூழலில் அண்ணாமலை தொழில் துறை அமைச்சர் பேச்சிற்கு பதில் கொடுத்துள்ளார் ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். 

"தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது, ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். 

அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என கிண்டல் செய்யும் விதமாக அண்ணாமலை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்ற அமைச்சர்கள் அண்ணாமலையிடம் வெவ்வேறு விவாகரங்களில் சிக்கிய நிலையில் தற்போது "ஸ" எழுத்து விவாகரத்தில் புதிதாக சிக்கி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

எந்த பக்கம் போனாலும் கேட் போட்டு அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் பாஜகவால் என்ன தான் இனி செய்வது என்ன சொல்வது என ஒவ்வொரு அமைச்சர்களும் ஒருமுறைக்கு இருமுறை செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பு யோசிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.